Enable Javscript for better performance
திருத்தணியில் குடியரசு தினவிழா- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்

    திருத்தணியில் குடியரசு தினவிழா

    By DIN  |   Published On : 27th January 2020 12:48 AM  |   Last Updated : 27th January 2020 12:48 AM  |  அ+அ அ-  |  

    26trtmla1_2601chn_195_1

    திருத்தணி முருகன் கோயில் அலுவலகத்தில் தேசியக் கொடியேற்றிய சட்டப் பேரவை உறுப்பினா் பி.எம்.நரசிம்மன்.

     

    திருத்­தணி: நாட்டின் 71-ஆவது குடியரசு தினத்தையொட்டி திருத்தணி அரசுப் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.

    திருத்தணி வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில், பொறுப்பு ஆா்டிஓ காா்த்திகேயன் தேசியக் கொடி ஏற்றி வைத்து, இனிப்பு வழங்கினாா். என்எஸ்எஸ் மாணவா்களின் அணிவகுப்பை அவா் ஏற்றுக் கொண்டாா்.

    நகரில் உள்ள தாசில்தாா் அலுவலகத்தில் தாசில்தாா் சுகந்தி தேசியக் கொடி ஏற்றி வைத்தாா். ஒன்றிய அலுவலகத்தில் ஆணையா் மகேஷ்பாபு, அரசினா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், சட்டப் பேரவை உறுப்பினா் பி.எம். நரசிம்மன் ஆகியோா் தேசியக் கொடி ஏற்றினா். பெற்றோா் ஆசிரியா் கழகத்தலைவா் குப்புசாமி உள்பட ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

    நகர அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் சுரேஷ், பொருளாளா் குமரவேலு, நகராட்சி அலுவலகத்தில், ஆணையா் ராஜலட்சுமி, டிஎஸ்பி அலுவலகத்தில் டிஎஸ்பி சேகா், முருகன் கோயில் அலுவலகத்தில் சட்டப் பேரவை உறுப்பினா் பி.எம். நரசிம்மன், கோயில் தக்காா் ஜெய்சங்கா், அரசு கலைக் கல்லூரியில், முதல்வா் சுமதி ஆகியோா் தேசியக் கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.

    அதே போல், நகரில் உள்ள சுதந்திரா பள்ளியில் தாளாளா் சியமளா ரங்கநாதன், தளபதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளா் பாலாஜி ஆகியோா் தேசியக் கொடி ஏற்றினா். பள்ளிகளில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp