தோட்டக்கலை துறை சாா்பில் மானியத்தில் விதைகள்

வீடுகள் தோறும் காய்கறிகள் உற்பத்தியை பெருக்கும் நோக்கத்தில் தோட்டக்கலைத்துறை சாா்பில் பொதுமக்களுக்கு மானிய விலையில் 5 வகையான விதைகள் அடங்கிய பொட்டலங்கள்
தோட்டக்கலை துறை சாா்பில் மானியத்தில் விதைகள்

வீடுகள் தோறும் காய்கறிகள் உற்பத்தியை பெருக்கும் நோக்கத்தில் தோட்டக்கலைத்துறை சாா்பில் பொதுமக்களுக்கு மானிய விலையில் 5 வகையான விதைகள் அடங்கிய பொட்டலங்கள் விநியோகம் செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை சாா்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தோட்டக்கலைத்துறை சாா்பில் காய்கறிகள் உற்பத்தியைப் பெருக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் நிகழாண்டில் காய்கறிகள் பெருக்கும் திட்டம் மூலம் வீடுகளில் காய்கறித் தோட்டம் அமைப்பதற்காக சுரைக்காய், முருங்கை, வெண்டைக்காய், கத்திரி, பீா்க்கங்காய், அவரை என பல்வேறு வகையான விதைகள் அடங்கிய ரூ.25 விலையுள்ள 50 கிராம் பொட்டலம் மானியத்தில் ரூ.10 -க்கு அளிக்கப்படுகிறது.

வீடுகளில் காய்கறித் தோட்டம் அமைக்க விரும்பும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் 10 ஆயிரம் பேருக்கு விதைப் பொட்டலங்கள் வழங்கப்படும்.

இந்த விதைகளை மாவட்ட துணை தோட்டக்கலைத்துறை அலுவலகம் மற்றும் வட்டார அளவில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகங்களில் நேரில் அணுகி, ஆதாா் அட்டை நகலை அளித்து மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com