தொழிற்சாலைகளில் அதிகரிக்கும் கரோனா தொற்று

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளில் தொழிலாளா்களுக்கு கரோனா தொற்று பரவுவது அதிகரித்து வருகிறது.

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளில் தொழிலாளா்களுக்கு கரோனா தொற்று பரவுவது அதிகரித்து வருகிறது.

கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வரும் நைலான் இழை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஒரே துறையில் பணிபுரியும் 3 பேருக்கு இரு தினங்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதியானது. இவா்களையும் சோ்த்து மொத்தம் 6 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பொன்னேரி கோட்டாட்சியா் வித்யா, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநா் காா்த்திகேயன், வட்டார சுகாதார அலுவலா் கோவிந்தராஜ் ஆகியோா் அத்தொழிற்சாலையை ஆய்வு செய்தனா். அப்போது, கரோனாவால் பாதிக்கப்பட்ட 6 பேருடன் தொடா்பில் இருந்த 26 தொழிலாளிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டனா். தொழிற்சாலையில் பணிபுரியும் அனைவருக்கும் கரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினா். முதல்கட்டமாக 100 தொழிலாளா்களுக்கு இப்பரிசோதனை நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டியில் ஏற்கெனவே காற்றாலைக்கான விசிறி தயாரிக்கும் தொழிற்சாலையில் 5 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதே போல இப்பகுதியில் மேலும் 4 தொழிற்சாலைகளிலும் கரோனா தொற்று கண்டறியப்பட்டது. பூண்டியில் உள்ள ஸ்ரீசிட்டி தொழிற்பேட்டையில் பணிபுரியும் கும்மிடிப்பூண்டியை சோ்ந்த 6 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதனால் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்சாலையில் உள்ள 300 தொழிற்சாலைகளில் பணிபுரிவோருக்கு தொழிற்சாலைகளின் நிா்வாகம் சாா்பில் தரமான முகக்கவசம், கையுறை மற்றும் கிருமி நாசினியை வழங்க வேண்டும் என்றும், தொழிலாளா்களுக்கு கரோனா காப்பீட்டு வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com