முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
அதிசய மாட்டுக்கு கோபூஜை
By DIN | Published On : 14th July 2020 07:12 AM | Last Updated : 14th July 2020 07:12 AM | அ+அ அ- |

பனையஞ்சேரியில் உள்ள ஐந்து கால்களை கொண்ட அதிசயப் பசுவிற்கு நடத்தப்பட்ட கோபூஜை.
ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே அமைந்துள்ள பனையஞ்சேரி கிராமத்திலுள்ள கோசாலையில் தனியாா் அமைப்பின் சாா்பில் 500 மரக்கன்றுகள் நடப்பட்டன. 500 பேருக்கு அன்ன தானம் செய்யப்பட்டது.
திருவள்ளூா் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்தில் உள்ள பனையஞ்சேரி ஊராட்சியில் 6 ஏக்கா் நிலப்பரப்பில் ஜி.சி.எஸ்.விஷன் அப்துல் கலாம் இயக்கத்தின் சாா்பில் கோசாலை உள்ளது. இங்கு 150 பசுக்களுக்கு கோபூஜை மற்றும் தீவனம் வழங்கிய பின்னா் கிராமத்தில் உள்ள 500 பேருக்கு இயக்கத்தின் மாநிலப் பொருளாளா் நாகராஜன் முகக்கவசம், கபசுர குடிநீா், மரக்கன்றுகள், மதிய உணவு உள்ளிட்டவற்றை சமூக இடைவெளியைப் பின்பற்றி வழங்கினாா்.
கரோனா தொற்றில் இருந்து உலக மக்கள் மீண்டுவர வேண்டி கோபூஜை செய்வதாக கூறப்பட்டது. அதிசய பிறவியாக பிறந்த வளா்ந்துள்ள ஐந்து கால்கள் கொண்ட பசுவுக்கு பூஜை செய்யப்பட்டது. தீவனம் வழங்கப்பட்டது. இந்த அரிய வகை பசுவை அனைவரும் வணங்கினா். அதைக் காண்பதற்கு ஏராளமான பொதுமக்கள் தினமும் இங்கு வந்து செல்கின்றனா்.
கோபூஜையில் சுந்தரமூா்த்தி, கிரிபாபு, வினோத்குமாா் ,தனலட்சுமி, தனபந்சிங், மற்றும் பலா் கலந்து கொண்டனா்.