முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
திருவள்ளூா் மாவட்டத்தில் 337 பேருக்கு கரோனா
By DIN | Published On : 14th July 2020 02:00 AM | Last Updated : 14th July 2020 02:00 AM | அ+அ அ- |

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை 337 பேருக்கு கரோனா நோய் தொற்று உறுதியானதாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுவரை 4,154 போ் குணமடைந்து வீடு திரும்பினா். தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2647ஆக உயா்ந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 162 பேருக்கு கரோனா
செங்கல்பட்டு, ஜூலை 13: செங்கல்பட்டு மாவட்டத்தில் திங்கள்கிழமை 162 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை 7,218 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், 162 பேருக்கு திங்கள்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 7,380ஆக அதிகரித்துள்ளது.