முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
பைக் மீது லாரி மோதல்: இளைஞா் பலி
By DIN | Published On : 14th July 2020 07:10 AM | Last Updated : 14th July 2020 07:10 AM | அ+அ அ- |

பொன்னேரி: சோழவரம் அருகே பைக் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
சோழவரம் காவல் நிலைய எல்லைகுட்பட்ட கும்மனூா் மேட்டுப்பாளையம் கிராமத்தில் வசித்து வந்தவா் குபேந்திரன் (33). அவா் பைக்கில் சோழவரம் சென்று விட்டு செங்குன்றம் நோக்கி வந்து கொண்டிருந்தாா். அப்போது லாரி, மோட்டாா் சைக்கிளில் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி குபேந்திரன் கீழே விழுந்ததில், பலத்த காயமடைந்து உயிரிழந்தாா். தகவல் அறிந்த சோழவரம் போலீசாா் அங்கு சென்று குபேந்திரன் சடலத்தை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து, தப்பி ஓடிய லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.