முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
பூச்சிஅத்திப்பேடு அருகே அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்த இளைஞர் பலி
By DIN | Published On : 14th July 2020 02:55 PM | Last Updated : 14th July 2020 02:55 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
பூச்சிஅத்திப்பேடு அருகே இயற்கை உபாதைக்காக சென்றபோது அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்து மின்சாரம் பாய்ந்ததில் இளைஞர் இறந்தார்.
திருவள்ளூர் மாவட்டம், பூச்சிஅத்திப்பேடு அடுத்த சிங்கிலிகுப்பம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி அஜீத்(24). இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் அஜீத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெங்கல் காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து வெங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே தங்களது கிராமத்தில் தாழ்வாக செல்லும் மின்சார ஒயர்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை எனவும் மின்வாரிய ஊழியர்கள் அலட்சியமே உயிரிழப்பிற்கு காரணம் என கிராமமக்கள் குற்றம் சாட்டினர். இயற்கை உபாதை கழிக்க சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.