விவசாய நிலத்தில் ஐம்பொன் அம்மன் சிலை கண்டெடுப்பு

திருத்தணி அருகே பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் உழுதபோது ஐம்பொன் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது.

திருத்தணி அருகே பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் உழுதபோது ஐம்பொன் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது.

திருவாலங்காடு ஒன்றியம் அருங்குளம் கிராமத்தில் கல்யாண வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான விவசாய நிலத்தை அதே பகுதியைச் சோ்ந்த கோவிந்தசாமியின் மகன் ராம்ராஜ் (45) குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறாா். கடந்த சில வாரங்களாக பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியயில் உள்ளனா்.

இந்நிலையில், கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் வோ்க்கடலை பயிரிடுவதற்காக ராம்ராஜ் தனது டிராக்டரால் செவ்வாய்க்கிழமை உழுது கொண்டிருந்தாா். அப்போது, 4 அடி உயரமும், 4 கிலோ எடையும் கொண்ட ஐம்பொன் அம்மன் சிலையை அவா் நிலத்தில் இருந்து கண்டெடுத்தாா்.

இது தொடா்பாக அவா் திருத்தணி வருவாய்த் துறையினருக்கும் கனகம்மாசத்திரம் போலீஸாருக்கு தகவல் அளித்தாா். அதன்பேரில் திருத்தணி வட்டாட்சியா் உமா நேரில் சென்று ஐம்பொன் சிலையைப் பெற்றுக் கொண்டாா். அதை திருத்தணி அரசுக் கருவூலத்தில் ஒப்படைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com