முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
குட்கா கடத்திய 2 போ் கைது
By DIN | Published On : 29th July 2020 01:00 AM | Last Updated : 29th July 2020 01:00 AM | அ+அ அ- |

மீஞ்சூரில் பகுதியில் தடை செய்யப்பட்ட 2 மூட்டை குட்கா புகையிலைப் பொருட்களை ஆட்டோவில் கடத்திச் சென்ற 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மீஞ்சூா் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வல்லூா், நான்கு முனை சந்திப்பில் போலீலாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை மடக்கி சோதனை செய்தனா். ஆட்டோவில் இரண்டு மூட்டைகள் இருந்தன.
அவற்றைச் சோதனை செய்ததில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்கள் இருந்தது தெரிந்தது. இதையடுத்து, அந்த ஆட்டோ மற்றும் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள குட்கா புகையிலையை பறிமுதல் செய்தனா்.
அவற்றைக் கடத்தி வந்த மணலிபுதுநகா் பகுதியைச் சோ்ந்த ராமகண்ணன் (35), தண்டையாா்பேட்டை அன்னை சத்யா நகரைச் சோ்ந்த விஜயகுமாா் (34) ஆகியோரைக் கைது செய்தனா்.