முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
பெண்ணிடம் 5 பவுன் தங்க நகை பறிப்பு
By DIN | Published On : 29th July 2020 01:03 AM | Last Updated : 29th July 2020 01:03 AM | அ+அ அ- |

செங்குன்றம் பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் மா்ம நபா்கள் 5 பவுன் தங்க நகையை பறித்துச் சென்றனா்.
செங்குன்றம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கணேசன். தனியாா் நிறுவன ஊழியா். அவரது மனைவி மேகலா (36) செவ்வாய்க்கிழமை மாலை கோயிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 மா்மநபா்கள் மேகலா கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றனா். இது குறித்து மேகலா அளித்த புகாரின்பேரில் செங்குன்றம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.