
கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய கண்காணிப்பு அலுவலரும், நகராட்சி நிா்வாக ஆணையருமான கே.பாஸ்கரன். உடன் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா்.
கரோனா தொடா்பாக தகவல் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் கே.பாஸ்கரன் தெரிவித்தாா்.
ஆவடி மாநகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் கரோனா பரவல் தடுப்பு முன்னேற்பாடுகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவள்ளூா் மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் கே.பாஸ்கரன், ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் ஆகியோா் தலைமை வகித்தனா்.
இதில், மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் கே.பாஸ்கரன் பேசியது:
திருவள்ளூா் மாவட்டத்தில் கரோனா குறித்து பொதுமக்களிடம் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தால் சுகாதாரத் துறைக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும். கரோனா பாதிப்பு உள்ள பகுதியில் சிறப்பு முகாம்கள் அமைத்து, சளி, காய்ச்சல், மூச்சுத் திணறல் உள்ளிட்டவற்றைக் கண்டறிய ஏற்பாடு செய்ய வேண்டும் என்றாா்.