எல்லையில் ஆந்திர காவல்துறையினர் முரட்டுத்தனம்: தமிழக மக்கள் அலைக்கழிப்பு

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர்-ஆரம்பாக்கம் இடையே ஆந்திர காவல்துறையினர் சோனைச் சாவடி அமைத்து கரோனா தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில்
எல்லையில் ஆந்திர காவல்துறையினர் முரட்டுத்தனம்: தமிழக மக்கள் அலைக்கழிப்பு

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர்-ஆரம்பாக்கம் இடையே ஆந்திர காவல்துறையினர் சோனைச் சாவடி அமைத்து கரோனா தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் கும்மிடிப்பூண்டியில் இருந்து ஆரம்பாக்கம் செல்லும் தமிழக மக்களிடம் முரட்டுத்தனமாக நடந்துக் கொள்வதுடன் தமிழக மக்களை அனுமதிக்க மறுக்க மறுக்கின்றனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர்-ஆரம்பாக்கம் இடையே 4 கிலோமீட்டர் இடைவெளியில் ஆந்திர பகுதிகள் உள்ளது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் மூலம் எளாவூர்-ஆரம்பாக்கம் இடையே பனங்காடு பகுதியில் ஆந்திர எல்லையில் ஆந்திர காவல்துறையினர் கரோனா தடுப்பு பணிக்காக சோதனைச் சாவடி அமைத்துள்ளனர்.

 இந்நிலையில் கடந்த 1 மாத காலமாக ஆரம்பாக்கம், தோக்கம்மூர், பூவலை, எகுமதுரை பகுதியில் இருந்து இந்த ஆந்திர பகுதியை கடந்து கும்மிடிப்பூண்டிக்கு சென்று திரும்பும் பொதுமக்களை ஆந்திர காவல்துறையினர் தடுத்து அவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்துக் கொள்வதுடன் அவர்களை தேசிய நெடுஞ்சாலை வழியே செல்லவிடாமல் ஏடூர் கொண்டமாநெல்லூர் வழியே 10கி.மீ அதிக தூரம் சுற்றி செல்லும்படி திருப்பி அனுப்பிவிடுகின்றனர்.

இந்த ஆந்திர காவல்துறையின் முரட்டுத்தனத்திற்கு ஆரம்பாக்கம் பகுதியில் உள்ள வங்கியில் பணிபுரிபவர்களும், பிற அரசுதுறை அதிகாரிகளும் சிக்கி அலைகழிக்கப்படுகின்றனர்.

 மேலும் ஆரம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்டு இந்த ஆந்திர பகுதியை தாண்டி 15 ஊராட்சிகளை சேர்ந்த 30 கிராமங்கள் உள்ள நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள், ஆந்திர எல்லை பனங்காட்டை தாண்டி ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு வந்து அவர்களது புகார்களை தெரிவிக்க முடிவதில்லை. அப்படி வருபவர்கள் ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு செல்கிறோம் என்று கூறினாலும் நீங்கள் ஆந்திராவிற்கு சென்றால் உங்களால் கரோனா தொற்று பரவும் என கூறி அவர்களை திருப்பி அனுப்பி விடுகின்றனர்.

மேலும் இந்த ஆந்திர காவல்துறையினர் தமிழக பகுதிகளுக்கு கடைகாரர்கள் கொண்டு செல்லும் குளிர்பானங்கள், ரொட்டி, பிஸ்கெட், பழங்கள் மற்றும் மருந்துகடைகாரர்கள் கொண்டு செல்லும் முகக்கவசங்கள், கிருமிநாசினிகளை வழியிலேயே பறித்து கொள்வதாக மேற்கண்ட 4 ஊராட்சிகளை சேர்ந்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

 இந்நிலையில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கி.வேணு மற்றும் ஆரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் மு.மணிபாலன் தமிழக மக்களிடம் கடுமையாக நடந்து, அவதூறாக பேசி மக்களை அலைகழிக்கும் ஆந்திர காவல்துறையின் நடவடிக்கைக்கு மாவட்ட நிர்வாகம் முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் புகார் அளித்துள்ளனர்.

எனவே தமிழக பகுதிக்கு ஆந்திர எல்லையைத் தாண்டி செல்லும் மக்களுக்கு ஆந்திர காவல்துறையினர் தொல்லை தராமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேற்கண்ட ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட 15 ஊராட்சிகளை சேர்ந்த 30 கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com