கும்மிடிப்பூண்டி ஒன்றிய ஊராட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட 61 ஊராட்சித் தலைவர்ளுக்கான ஆலோசனைக் கூட்டம் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி ஒன்றிய ஊராட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட 61 ஊராட்சித் தலைவர்ளுக்கான ஆலோசனைக் கூட்டம் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். ஒன்றிய பொறியாளர் நரசிம்மன் முன்னிலை வகித்தார். நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழுத் தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார், துணை தலைவர் மாலதி குணசேகரன் பங்கேற்றனர். கும்மிடிப்பூண்டி ஒன்றிய ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் சுண்ணாம்புகுளம் ஊராட்சி தலைவர் எஸ்.எம்.ரவி வரவேற்றார்.

நிகழ்வில் பேசிய ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பின் செயலாளர் கண்ணம்பாக்கம் ஊராட்சித் தலைவர் சதீஷ் பேசுகையில் ஊராட்சி செயலாளர்கள் தன்னிச்சையாக செயல்படாமல் ஊராட்சி தலைவர்களின் ஆலோசனைப்படி நடக்க உத்தரவிட வேண்டும் என்றும், ஊராட்சி தலைவர்களுக்கு பயணபடி உள்ளிட்ட அனைத்து படிகளையும் வழங்க வேண்டும் என்றும், ஒன்றிய கவுன்சிலர்கள் ஊராட்சி தலைவர்களின் அதிகாரத்தில் தலையிட கூடாதென்றும், அரசுதிட்டங்கள் குறித்து முதல் தகவலை அதிகாரிகள் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு தெரிவிக்க வேண்டும், வட்டார வளர்ச்சி அலுவலம் சார்பில் அனைத்து ஊராட்சி தலைவர்களை உள்ளடக்கிய வாட்ஸ்அப் குழு ஆரம்பித்து தகவல் பரிமாற்றம் செய்யவேண்டும் என்றார்.

நிகழ்வில் ஊராட்சி தலைவர் கூட்டமைப்பு நிர்வாகிகள் கீழ்முதலம்பேடு ஊராட்சித் தலைவர் நமச்சிவாயம், பூவலம்பேடு ஊராட்சி தலைவர் வெங்கடாசலபதி,தண்டலச்சேரி ஊராட்சி தலைவர் ஆனந்தராஜ், மாதர்பாக்கம் ஊராட்சி தலைவர் சீனிவாசன் பேசினர். மேலும் நிகழ்வில் எகுமதுரை ஊராட்சி தலைவர் ஸ்ரீபிரியா மகேந்திரன், மாநெல்லூர் ஊராட்சி தலைவர் லாரன்ஸ், பாதிரிவேடு ஊராட்சி தலைவர் என்.டி.மூர்த்தி, சிறுபுழல்பேட்டை ஊராட்சி தலைவர் சுசிலா மூர்த்தி கரோனா தடுப்பு பணிகளுக்காக ஊராட்சிகளில் கூடுதல் செலவினங்களுக்காக ஊராட்சி ஒன்றியம் ஊராட்சிகளுக்கு தனி நிதி ஒதுக்கி தர வேண்டும் என்றார்.

கூட்டத்தில் ஊராட்சித் தலைவர்கள் புதுவாயல் அற்புதராணி சதீஷ்குமார், பன்பாக்கம் கே.எஸ்.சீனிவாசன், பெருவாயல் ராஜசேகர், ஆரம்பாக்கம் தனசேகர், சாணாபுத்தூர் அம்பிகா பிர்லா, கண்ணன்கோட்டை கோவிந்தசாமி, தேர்வாய் முனிவேல் ஆகியோர் பேசும்போது ஊராட்சிகளில் புதிதாக குடிநீர்மேல்நிலை தொட்டி வசதி ஏற்படுத்த கோரினர்.

கூட்டத்தில் நத்தம் ஊராட்சி தலைவர் கலைமதி சங்கர், நேமள்ளூர் கோவிந்தம்மாள், பல்லவாடா லட்சுமி பன்னீர்செல்வம்,புதுப்பாளையம் கௌசல்யா, சூரப்பூண்டி வாணிஸ்ரீ பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட ஊராட்சி தலைவர்கள் பேசினர்.  கூட்டத்தில் பேசிய ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் பேசுகையில் அனைத்து ஊராட்சித் தலைவர்களும் ஒற்றுமையாக செயல்பட்டு ஊராட்சி ஒன்றியத்துடன் ஒருங்கிணைந்து ஊராட்சிகளில் சிறப்பாக பணி செய்யவேண்டும் என்றார்.

 வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியம் பேசுகையில் ஊராட்சி தலைவர்கள் ஊராட்சி கணக்குகளை முறையாக பராமரித்து மாதந்தோறும் கணக்குகளை வட்டார வளர்ச்சி அலுவலத்தில் சமர்பிக்க வேண்டும் என்றும்,ஊராட்சியில் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் என்று அறிவுறுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com