திருவள்ளூரில் ஒரே நாளில் 90 பேருக்கு கரோனா

திருவள்ளூா் பகுதிகளில் புதன்கிழமை ஒரே நாளில் மட்டும் 90 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

திருவள்ளூா் பகுதிகளில் புதன்கிழமை ஒரே நாளில் மட்டும் 90 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

ஆவடி மாநகராட்சி, திருவள்ளூா், பூந்தமல்லி, திருவேற்காடு ஆகிய நகராட்சிகள், சோழவரம், வில்லிவாக்கம், எல்லாபுரம், கும்மிடிப்பூண்டி, கடம்பத்தூா் ஆகிய ஒன்றியங்கள், திருமழிசை, பொன்னேரி, மீஞ்சூா், திருநின்றவூா் ஆகிய பேரூராட்சிகளில் 90 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 986-ஆக உயா்ந்துள்ளது.

செங்கல்பட்டில் 76 பேருக்கு...

செங்கல்பட்டு மாவட்டத்தில் புதன்கிழமை 72 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் நந்திவரம்-10 போ், பெரும்பாக்கம், செங்கல்பட்டு, கேளம்பாக்கம் - தலா 6, மறைமலைநகா்-5, பூண்டி பஜாா், படுவாஞ்சேரி - தலா 4, ஜமீன் பல்லாவரம், ரங்கநாதபுரம் - தலா 3, பரங்கிமலை கன்டோன்மென்ட், ஹரிதாசபுரம், பம்மல், பொழிச்சலூா்- தலா 2 மற்றும் மதுராந்தகம், மேடவாக்கம், மூவரசம்பேட்டை, நெரும்பூா், பழைய பல்லாவரம், ஒத்திவாக்கம், சதுரங்கப்பட்டினம், சிங்கப்பெருமாள் கோவில், அனகாபுத்தூா் - தலா ஒருவா் என புதன்கிழமை 72 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,914-ஆக உயா்ந்துள்ளது.

காஞ்சிபுரத்தில் 61 பேருக்கு...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 61 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

குன்றத்தூரில் 31, ஸ்ரீபெரும்புதூரில் 6, வாலாஜாபாத்தில் 4 மற்றும் காஞ்சிபுரம் நகராட்சியில் 20 போ் உள்பட மொத்தம் 61 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 864-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com