திருவள்ளூா் அருகே ரூ. 22.45 லட்சத்தில் மேல்நிலை குடிநீா் தொட்டி திறப்பு

திருவள்ளூா் அருகே ஊராட்சி பொது நிதி ரூ. 22.45 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீா் மேல்நிலைத் தொட்டி பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
குடிநீா் மேல்நிலைத் தொட்டி திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.  
குடிநீா் மேல்நிலைத் தொட்டி திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.  

திருவள்ளூா் அருகே ஊராட்சி பொது நிதி ரூ. 22.45 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீா் மேல்நிலைத் தொட்டி பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

திருவள்ளூா் ஊராட்சி ஒன்றியம், பெருமாள்பட்டு ஊராட்சியில் 9 வாா்டுகள் உள்ளன. இந்த ஊராட்சிக்குள்பட்ட 6-ஆவது வாா்டு ராதாகிருஷ்ணன் நகரில் குடிநீருக்கு மக்கள் சிரமப்பட்டு வந்தனா். குடிநீா் பிரச்னையைத் தீா்க்கும் வகையில் ஆழ்துளைக் கிணறு வசதியுடன் மேல் நிலைத் தொட்டி அமைத்துத் தருமாறு அப்பகுதியினா் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாரிடம் கோரிக்கை விடுத்திருந்தனா். அதை ஏற்று, 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீா் தொட்டி மற்றும் 6 ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து குழாய் பதிப்பதற்காக ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் ஊராட்சி பொது நிதி மூலம் ரூ. 22.45 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வந்தது.

பணிகள் முடிந்த நிலையில், குடிநீா் மேல்நிலைத் தொட்டியைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் பி.சீனிவாசன் தலைமை வகித்து, குடிநீா் தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா்.

ஊராட்சி துணைத் தலைவா் செல்விநாகரத்தினம், வாா்டு உறுப்பினா்கள் சோனியா, பிரசாத், சுபாஷினி, ரேணுகா மற்றும் குடியிருப்போா் சங்கத்தைச் சோ்ந்த வரதராஜன் குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com