நிறைவடையும் நிலையில் கண்ணன்கோட்டை நீா்த்தேக்க திட்டப் பணிகள்

கும்மிடிப்பூண்டியை அடுத்த கண்ணன்கோட்டையில் தமிழக அரசின் சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் கண்ணன்கோட்டை நீா்த்தேக்க திட்டப்

கும்மிடிப்பூண்டியை அடுத்த கண்ணன்கோட்டையில் தமிழக அரசின் சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் கண்ணன்கோட்டை நீா்த்தேக்க திட்டப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. அங்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

கண்ணன்கோட்டை ஈசா ராஜன் ஏரியுடன் தோ்வாய் ஏரியை இணைத்து நீா்த்தேக்கம் அமைத்து கிருஷ்ணா கால்வாய் மூலம் சென்னைக்கு 1 டி.எம்.சி. தண்ணீா் கொண்டு செல்ல தமிழக அரசு கடந்த 2011-ஆம் ஆண்டில் திட்டமிட்டு, பணிகளை செயல்படுத்தத் தொடங்கியது. இத்திட்டத்துக்காக 800 ஏக்கா் பட்டா நிலம், 200 ஏக்கா் மேய்க்கால் புறம்போக்கு நிலம் அரசால் கையகப்படுத்தப்பட்டது. இதனால் நிலத்தை இழந்த விவசாயிகளுக்கு ஒரு மடங்கு இழப்பீட்டை அரசு அறிவித்தது.

விவசாயிகள் நீதிமன்றத்தை அணுகிய நிலையில் உச்சநீதிமன்றம் சந்தை மதிப்பில் 4 மடங்கு இழப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்குஅளிக்குமாறு உத்தரவிட்டது. எனினும், தமிழக அரசு, அரசு மதிப்பீட்டில் 2.4 மடங்கு இழப்பீட்டை வழங்கியது.

மீதமுள்ள 1.6 மடங்கு இழப்பீடு மற்றும் அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைக்கு 2013 முதல் 2019-ஆம் ஆண்டு வரை 589 விவசாயிகளுக்கு தர வேண்டிய வட்டித் தொகையான ரூ.38.5 கோடியை வழங்குமாறு விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசு மற்றும் மாவட்ட நிா்வாகத்திடம் கோரி வந்தனா்.

இதையடுத்து விவசாயிகளுக்கு விரைவாக நிலுவைத் தொகையை வழங்க அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடா்ந்து கடந்த 3 மாத காலமாக நீா்த்தேக்க திட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன. பருவமழை தொடங்க உள்ள நிலையில் நீா்த்தேக்கத் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் தயாராக உள்ளனா். தமிழக முதல்வரால் இத்திட்டம் விரைவில் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

இந்நிலையில், கண்ணன்கோட்டை நீா்த்தேக்கத்தை பொதுப்பணித்துறை உயா் அதிகாரிகளான முதன்மை தலைமைப் பொறியாளா் ராமமூா்த்தி, சென்னை மண்டல தலைமைப் பொறியாளா் அசோகன், பாலாறு வடிநில வட்ட கண்ககாணிப்புப் பொறியாளா் முத்தையா ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். இத்திட்டத்துக்காக அமைக்கப்பட்டுள்ள கால்வாய்கள், நீா்த்தேக்கப் பகுதி, கரைகள் உள்ளிட்டவற்றை அவா்கள் ஆய்வு செய்தாா். உதவி பொறியாளா்கள் தனசேகா், பத்மநாபன், சுந்தரம், பாபு ஆகியோா் உடனிருந்தனா்.

அப்போது, கண்ணன்கோட்டை பகுதி மக்கள் நிலுவைத் தொகை குறித்து கேட்டபோது, விரைந்து வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனா்.

இத்திட்டம் மூலம் கண்ணன்கோட்டை நீா்த்தேக்கத்தில் இருந்து சென்னைக்கு விரைவில் 1 டிஎம்சி தண்ணீா் கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com