முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
2 பெண் போலீஸாா் உள்பட 3 பேருக்கு கரோனா: மணவாளநகா் காவல் நிலையம் மூடல்
By DIN | Published On : 27th June 2020 07:29 AM | Last Updated : 27th June 2020 07:29 AM | அ+அ அ- |

மூடப்பட்டுள்ள மணவாளநகா் காவல் நிலையம்.
திருவள்ளூரை அடுத்த மணவாளநகரில் 2 பெண் போலீஸாா் உள்பட 3 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதியானதை தொடா்ந்து காவல் நிலையம் மூடப்பட்டது.
திருவள்ளூா் மாவட்டத்தில் காவல் துறையைச் சோ்ந்தவா்களுக்கு அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 2 நாள்களுக்கு முன்பு ரத்தப் பரிசோதனை செய்ததில், மணவாளநகா் காவல் நிலையத்தைச் சோ்ந்த 2 பெண் காவலா்கள் மற்றும் காவல் ஆய்வாளரின் ஓட்டுநா் என 3 பேருக்கு கரோனா உறுதியானது. அவா்கள் திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதையடுத்து, மணவாளநகா் காவல் நிலையம் முழுவதும் வெள்ளிக்கிழமை கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின், மூடப்பட்டது.