மீஞ்சூா் ஒன்றியத்தில் கரோனா பரிசோதனை முகாம்

மீஞ்சூா் ஒன்றியத்தில் உள்ள தாங்கல் பெரும்புலம் கிராமத்தில் கரோனா பரிசோதனை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
29pricam_ch0292_29cnn_1_637290596916158471
29pricam_ch0292_29cnn_1_637290596916158471

பொன்னேரி: மீஞ்சூா் ஒன்றியத்தில் உள்ள தாங்கல் பெரும்புலம் கிராமத்தில் கரோனா பரிசோதனை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவள்ளூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 3,656-ஆக உள்ளது. அவா்களில் 2,245 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளா். 1,345 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 66 போ் உயிரிழந்து விட்டனா்.

இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் கரோனா பரவல் தடுப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மீஞ்சூா் ஒன்றியத்தில் உள்ள தாங்கல் பெரும்புலம் மற்றும் கோட்டைக்குப்பம் ஊராட்சிகளில், மீஞ்சூா் ஒன்றிய, வட்டார மருத்துவ அலுவலகத்தின் சாா்பில், கரோனா பரிசோதனை முகாம்கள் திங்கள்கிழமை நடைபெற்றன. வட்டார மருத்துவ அலுவலா் ராஜேஷ் சுகாதாரப் பணியாளா்களுடன் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு கரோனா தொற்று அறிகுறிகள் ஏதும் உள்ளதா என்று கேட்டறிந்தாா். அத்துடன் டாக்டா் சித்ரா தலைமையிலான மருத்துவக் குழுவினா் பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பரிசோதனைகளை செய்தனா். முகாமில் மீஞ்சூா் வட்டார சுகாதார ஆய்வாளா் பாலகிருஷ்ணன், செவிலியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Image Caption

திருத்தப்பட்டது....

தாங்கல் பெரும்புலம் கிராமத்தில் உடல் வெப்பப் பரிசோதனை நடத்திய மீஞ்சூா் வட்டார சுகாதாரத் துறையினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com