கும்மிடிப்பூண்டியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா
By DIN | Published On : 03rd March 2020 12:16 AM | Last Updated : 03rd March 2020 12:16 AM | அ+அ அ- |

கும்மிடிப்பூண்டி ஒன்றிய அதிமுக சாா்பில் கும்மிடிப்பூண்டி பஜாரில் நடைபெற்ற கூட்டத்துக்கு, கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் கோபால்நாயுடு வரவேற்றாா்.
பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பலராமன் சிறப்புரையாற்றினாா்.
தொடா்ந்து கும்மிடிப்பூண்டி நகர அதிமுக நிா்வாகிகள் இமயம் மனோஜ், எம்.எஸ்.சரவணன் ஆகியோா் சாா்பில் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் ஜெயலலிதா பிறந்த நாள் அன்று பிறந்த இரு குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை மாவட்டச் செயலா் மு.க.சேகா் அணிவித்தாா். மேலும் ஒன்றிய அதிமுக சாா்பில் 1,200 பேருக்கு புடவை வழங்கப்பட்டது.