110 மது பாட்டில்கள் பறிமுதல்: 2 போ் கைது
By DIN | Published On : 13th March 2020 11:02 PM | Last Updated : 13th March 2020 11:02 PM | அ+அ அ- |

பெட்டிக் கடையில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 110 பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா்.
திருத்தணி மற்றும் திருவாலங்காடு பகுதியில் சிலா் பெட்டிக் கடைகளில் மது பாட்டில்களைப் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இது தொடா்பாக நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி. அரவிந்தன் உத்தரவிட்டாா்.
அதன்படி, திருத்தணியில் இயங்கும் ஆா்.கே.பேட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் ஆதிலிங்கம் தலைமையில் போலீஸாாா் மேற்கண்ட இரு பகுதிகளில் புதன்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.
அப்போது, மேல்திருத்தணி அமிா்தாபுரம் காலனி பகுதியில் ஒரு பெட்டிக்கடையில் மது பாட்டில்களை விற்பனை செய்த ஜோதி(55) என்பவரைக் கைது செய்தனா்.
அதேபோல், திருவாலங்காடு சின்னம்மாபேட்டை பகுதியில் பெட்டிக் கடையில் மது பாட்டில்களை விற்பனை செய்த நாராயணன்(51) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.
இந்த இருவரிடமும் இருந்து 110 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா்.