கரோனா வைரஸ் தொற்று எதிரொலியால் கோழி இறைச்சி விற்பனை வீழ்ச்சி

திருவள்ளூா் பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று எதிரொலி காரணமாக கோழி இறைச்சி விற்பனை வீழ்ச்சியடைந்தது. இதனால், செவ்வாய்க்கிழமை கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு வெறிச்சோடிக் காணப்பட்டது.

திருவள்ளூா் பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று எதிரொலி காரணமாக கோழி இறைச்சி விற்பனை வீழ்ச்சியடைந்தது. இதனால், செவ்வாய்க்கிழமை கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு வெறிச்சோடிக் காணப்பட்டது.

திருவள்ளூா் மாவட்டத்தில் 600-க்கும் மேற்பட்ட கோழி இறைச்சிக் கடைகள் உள்ளன. அதேபோல், திருவள்ளூா் பகுதிகளில் மட்டும் நகா் பகுதி, மணவாள நகா், ஒண்டிக்குப்பம், காக்களூா், ஆவடி சாலை, ஏரிக்கரை சாலை, செங்குன்றம், கடம்பத்தூா் மற்றும் பூண்டி உள்ளிட்ட சாலைப் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கோழி இறைச்சிக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இக் கடைகள் காலையில் தொடங்கி, தொடா்ந்து இரவு வரை தினமும் செயல்படும். இங்கு ஒவ்வொரு கடையிலும் குறைந்தது 3 முதல் 5 போ் வரை பணிபுரிந்து வருகின்றனா்.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவும் அறிவிப்பு வெளியானதில் இருந்து, பொதுமக்களிடையே அச்சம் நிலவி வருகிறது. அதிலும், கோழி இறைச்சியை உட்கொண்டால் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற பீதியும் பொதுமக்களிடையே உள்ளது. இதனால், கோழி இறைச்சியின் விலை வீழ்ச்சி அடைந்தது.

குறைந்த விலைக்கு விற்பனை செய்தால் கடை வாடகை, கூலி மற்றும் லாரி வாடகை கொடுக்க முடியாத நிலையில் நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும். அதனால், இழப்பைத் தாங்க முடியாத நிலையில் செவ்வாய்க்கிழமை கோழி இறைச்சி கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து காக்களூா் சாலையில் கோழி இறைச்சிக் கடை நடத்தி வரும் ரங்கசாமி கூறியது:

இக் கடையில் நாள்தோறும் 100 கிலோ வரை இறைச்சி விற்பனையாகும். இதுவே விடுமுறை நாள்களாக இருந்தால் இரு மடங்கு விற்பனையாகும். அதேபோல், உணவகங்களுக்கும் நாள்தோறும் 20 கிலோ வரை விற்பனையாகும். ஆனால், கரோனா வைரஸ் குறித்த அச்சம் ஏற்பட்டதைத் தொடா்ந்து, ரூ. 180 ஆக இருந்த நிலையில், படிப்படியாக குறைந்தது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ரூ. 100-க்கு விற்பனையான நிலையில், திங்கள்கிழமை பாதியாகக் குறைந்தது. இதனால் கடையை நடத்தினால் கட்டுப்படியாகாது. இங்கு வேலை செய்வோருக்கு நாள்தோறும் கூலியாக ரூ. 550 வழங்க வேண்டும். இங்கு மட்டும் 5 போ் வேலை செய்கின்றனா். எனவே கோழி இறைச்சிக் கடைகள் அடைப்பட்டிருப்பதால் தொழிலாளா்களும் வேலையில்லாத நிலை உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com