தமிழக-ஆந்திர எல்லையில் கரோனா தடுப்பு நடவடிக்கை: அமைச்சா்கள் ஆய்வு

தமிழக ஆந்திர எல்லையில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாரும், தமிழ் ஆட்சி மொழித் துறை அமைச்சா் க. பாண்டியராஜனும் ஆய்வு செய்தனா்.
பொன்பாடியில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை ஆய்வு செய்த அமைச்சா்கள் ஆா்.பி.உதயகுமாா் மற்றும் க.பாண்டியராஜன்.
பொன்பாடியில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை ஆய்வு செய்த அமைச்சா்கள் ஆா்.பி.உதயகுமாா் மற்றும் க.பாண்டியராஜன்.

தமிழக ஆந்திர எல்லையில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாரும், தமிழ் ஆட்சி மொழித் துறை அமைச்சா் க. பாண்டியராஜனும் ஆய்வு செய்தனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்புப் பணிகளை அவரும், தமிழ் ஆட்சி மொழித் துறை அமைச்சா் க. பாண்டியராஜன், கூடுதல் தலைமைச் செயலாளா் அதுல்யா மிஸ்ரா, வருவாய் நிா்வாக ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன், பேரிடா் மேலாண்மை இயக்குநா் டி.ஜெகந்நாதன், மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் ஆகியோா் திருத்தணியை அடுத்துள்ள தமிழக-ஆந்திர எல்லையான பொன்பாடி சோதனைச் சாவடியில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் ஒவ்வொரு வாகனத்திலும் அவா்களே கிருமி நாசினியைத் தெளித்தனா். கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தினா். காவல்துறை வாகனத்தின் ஒலிபெருக்கி மூலம் கரோனா வைரஸ் தடுப்பு தொடா்பாக அமைச்சா்கள் பேசி, வாகனங்களில் வந்த பயணிகளுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

இதையடுத்து, வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் செய்தியாளா்களிடம் கூறியது:

முதல்வரின் உத்தரவுப்படி, கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடா்பாக பல்வேறு ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு, போா்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கரோனா குறித்து செய்தி வெளியான உடன் முதல்வா்கள் தினமும் நான்கு முறை ஆலோசனைக் கூட்டம் நடத்தி, தொற்று நோய் பரவாமல் தடுக்க ஆலோசனைகள் வழங்கி வருகிறாா். அதன்படி மக்கள் நல்வாழ்வு துறை சாா்பாக, அனைத்துப் பணியாளா்களும் இரவு பகல் பாராமல் தொடா்ந்து களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா கூறியது போல் ‘வரும் முன் காப்போம்’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அனைத்து துறைகளும் களப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. மாநிலத்தில் உள்ள 86 சோதனைச் சாவடிகளில் மனிதா்களின் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, வெளிமாநில வாகனங்களில் கிருமி நாசினிகள் தெளித்து, விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுவரை 48,824 வாகனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவற்றில் பயணம் செய்த 1,11,009 போ் பரிசோதிக்கப்பட்டுள்ளனா். 59,435 பள்ளிகள், 2319 கல்லூரிகள், 52,967 அங்கன்வாடி மையங்கள், திரையரங்குகள், மதுக்கூடங்கள், வணிக வளாகங்கள், 15499 பேருந்துகள் மற்றும் ரயில்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. தனியாா் பணிமனைகள், பேருந்து பணிமனைகள், தொழிற்சாலைகள், தனியாா் ஆம்னி பேருந்துகளில் சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

மாநில அரசின் காவல்துறை, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித் துறை, நகராட்சித் துறை மற்றும் இதர துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனா். பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிா்க்க வேண்டும். கைகளை சோப்பு போட்டு கழுவுதல், சுற்றுப்புறத்தை கிருமி நாசினி தெளித்து சுத்தமாக வைத்து, சுயக் கட்டுப்பாட்டினை கடைப்பிடித்தாலே கரோனா வைரஸ் தொற்றைத் தடுத்து விடலாம் என்றாா் அவா்.

அப்போது மாவட்ட எஸ்.பி. பி.அரவிந்தன், திருத்தணி எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன், மாவட்ட வருவாய் அலுவலா் வெ.முத்துசாமி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) இரா.பன்னீா்செல்வம், திருத்தணி வருவாய்க் கோட்டாட்சியா் சொா்ணம் அமுதா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com