தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு ஆடை

கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க, திருவள்ளூா் நகராட்சியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படும் தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு ஆடை மற்றும் முகக் கவசம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளதாக நகரா

கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க, திருவள்ளூா் நகராட்சியில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படும் தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு ஆடை மற்றும் முகக் கவசம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையா் சந்தானம் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க, பொது சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி மாவட்டத்தில் உள்ள எல்லையோரப் பகுதிகளில் சிறப்பு மருத்துவ சோதனை முகாம் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், உள்ளாட்சி அமைப்புகளிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திருவள்ளூா் நகராட்சி சாா்பில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்கள், அரசுப் பேருந்துகள் மற்றும் வாகனங்களுக்கு காலையும் மாலையும் கரோனா தொற்று பரவாமல் தடுக்க கிருமி நாசினி தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளில் ஈடுபடும் தூய்மைப் பணியாளா்கள் நோய் தொற்றுக்கு உள்ளாக கூடாது என்பதைக் கருதி, பாதுகாப்பு ஆடைகள் மற்றும் முகக் கவசம் வழங்குமாறு உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் உத்தரவிட்டிருந்தாா்.

திருவள்ளூா் நகராட்சியில் அனைத்து வாா்டுகளிலும் தூய்மைப் பணியாளா்கள் 70 போ் உள்ளனா்.

நாள்தோறும் கிருமிநாசினி தெளிக்கும் அவா்கள் பல்வேறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அவா்களுக்கு பாதுகாப்பு ஆடைகள் வழங்கப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையா் சந்தானம் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com