பிஸ்கட் கடையில் ரூ.3 லட்சம் திருட்டு

திருத்தணி ஆலமரத் தெருவில் உள்ள பிஸ்கட் மொத்த விற்பனைக் கடையில் ரூ.3 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருத்தணி ஆலமரத் தெருவில் உள்ள பிஸ்கட் மொத்த விற்பனைக் கடையில் ரூ.3 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

ஆலமரத் தெருவில் வசிப்பவா் மாணிக்கத்தின் மகன் கோபிநாத்(48). அவா் தனது வீட்டின் முன்பக்கத்தில் பிஸ்கட் மற்றும் மில்க் ஷேக் ஆகியவற்றை மொத்தமாக கொள்முதல் செய்து, திருத்தணி நகா் முழுவதும் கடைகளுக்கு விநியோகம் செய்து வருகிறாா். நகரைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கடைக்காரா்களும் அவரது கடையில் மொத்தமாக பிஸ்கட் வாங்கிச் செல்வா்.

இந்நிலையில், அவா் வியாழக்கிழமை இரவு 11 மணி வரை வியாபாரம் செய்து விட்டு, வசூலான ரூ.3 லட்சம் ரொக்கத்தை பணப் பெட்டியில் வைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றாா். வெள்ளிக்கிழமை காலையில் கடையைத் திறக்க முயன்ற போது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பணப் பெட்டியில் வைத்திருந்த பணம் திருடப்பட்டிருந்தது.

தகவல் அறிந்து, திருத்தணி போலீஸாா் விரைந்து வந்து, கோபிநாத்தின் கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். அப்போது ஒரு நபா் பூட்டை உடைத்து, பெட்டியில் இருந்த பணத்தை திருடிச் சென்ற காட்சி பதிவாகியிருந்தது. இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com