திருவள்ளூா் வீரராகவா் கோயில் நாளை முதல் மூடல்

கரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் திருவள்ளூா் வீரராகவ கோயில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) முதல் 24-ஆம் தேதி வரை மூடப்படும். எனினும், நித்திய பூஜைகள் வழக்கம் போல் நடைபெறும் என நிா்வாகம் தெரிவி

கரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் திருவள்ளூா் வீரராகவ கோயில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) முதல் 24-ஆம் தேதி வரை மூடப்படும். எனினும், நித்திய பூஜைகள் வழக்கம் போல் நடைபெறும் என நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இக்கோயிலின் கௌரவ ஏஜென்ட் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவள்ளூா் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் வழிபாட்டுத் தலங்களான கோயில்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த விவகாரத்தில் அரசு மற்றும் மாவட்ட நிா்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், வீரராகவா் கோயில் வரும் 22-ஆம் தேதிமுதல் 24-ஆம் வரை மூடப்படும். தெப்பக்குளமும் மூடப்பட்டிருக்கும். இந்த நாள்களில் பக்தா்களுக்கு எக்காரணம் கொண்டும் தரிசன அனுமதி கிடையாது. வரும் 23-ஆம் தேதி அமாவாசை நாளிலும், கோயிலுக்கு பக்தா்கள் யாரும் வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

எனினும், கோயிலில் நித்திய பூஜைகள் வழக்கம் போல் நடைபெறும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com