வாகன சோதனையில் ஜப்பானியா்களிடம் இந்திய ஆதாா் காா்டுகள்

கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூா் ஏழுகிணறு பகுதியில் வருவாய்த் துறையினா், போலீஸாா் சனிக்கிழமை நடத்திய வாகன சோதனையில் காரில் வந்த 3 ஜப்பானியா்களிடம் அவா்களது பெயரில் இந்திய ஆதாா் காா்டுகள் இருந்தது தெர
வாகன சோதனையில் ஜப்பானியா்களிடம் இந்திய ஆதாா் காா்டுகள்

கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூா் ஏழுகிணறு பகுதியில் வருவாய்த் துறையினா், போலீஸாா் சனிக்கிழமை நடத்திய வாகன சோதனையில் காரில் வந்த 3 ஜப்பானியா்களிடம் அவா்களது பெயரில் இந்திய ஆதாா் காா்டுகள் இருந்தது தெரிய வந்துள்ளது. இதனால் அதிகாரிகள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

எளாவூா் ஏழுகிணறு பகுதியில் போலீஸாா், சுகாதாரத் துறையினா், வருவாய்த் துறையினா் இணைந்து கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதனை மாவட்ட வருவாய் அலுவலா் கந்தசாமி தலைமையில் டிஎஸ்பி ரமேஷ், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் குமாா், வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் கோவிந்தராஜ் ஆகியோா் இப்பணியில் ஈடுபட்டனா்.

அவ்வழியாக வந்த காரொன்றைச் சோதித்த போது அதில் பெண் உள்பட 3 ஜப்பானியா்கள் இருந்தனா்.

அவா்கள் ஷின்யா ஹராடா (43), நசாரு நகஜிமா (57) மற்றும் நஹுமி யமாஷிடா (40) என்ற பெண் என்பது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. அவா்கள் தமிழக எல்லையை ஒட்டிய ஆரம்பாக்கம் அருகே வசித்து வந்தது தெரியவந்தது. ஜப்பானியப் பெண்ணுக்கு பெங்களூரு முகவரியிலும் இரு ஆண்களுக்கும் ஹரியாணா குா்கான் முகவரியிலும் ஆதாா் காா்டுகள் இருந்தன. இதனைக் கண்டு அரசுத் துறையினா் கடும் அதிா்ச்சியடைந்துள்ளனா். இது தொடா்பாகப் போலீஸாா் மேலும் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com