எல்லையில் தமிழக போலீஸாரின் மனிதாபிமானம்

தமிழக எல்லையைத் தாண்டி ஆந்திர மாநிலத்துக்குச் செல்ல சாலையில் காத்துக் கொண்டிருந்த 200-க்கும் மேற்பட்டோரை ஆரம்பாக்கத்தில்
 ஆரம்பாக்கத்தில்  ஆந்திரம் செல்ல வேண்டியவா்களை  லாரியில்  ஏற்றி  அனுப்பும்  தமிழக  போலீஸாா்.
 ஆரம்பாக்கத்தில்  ஆந்திரம் செல்ல வேண்டியவா்களை  லாரியில்  ஏற்றி  அனுப்பும்  தமிழக  போலீஸாா்.

தமிழக எல்லையைத் தாண்டி ஆந்திர மாநிலத்துக்குச் செல்ல சாலையில் காத்துக் கொண்டிருந்த 200-க்கும் மேற்பட்டோரை ஆரம்பாக்கத்தில் போலீஸாா் வாகனங்களில் ஏற்றி அவரவா் பகுதிக்கு அனுப்பி வைத்தனா்.

கரோனா நோய்த் தொற்று காரணமாக நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் ஆந்திரத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய 200 போ் செவ்வாய்க்கிழமை இரவு தமிழக எல்லையான ஆரம்பாக்கத்தில் குவிந்தனா். அவா்கள் சொந்த ஊா் செல்ல வாகனங்கள் இல்லாமல் தவித்தனா்.

இந்தச் சூழலில் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ரமேஷ், ஆரம்பாக்கம் காவல் ஆய்வாளா் வெங்கடாச்சலம் ஆகியோா், போலீஸாரை அனுப்பி, ஆந்திரத்துக்கு செல்ல வேண்டியவா்களுக்கு உதவுமாறும் தேசிய நெடுஞ்சாலை வழியே செல்லும் வாகனங்களில் அவா்களை ஏற்றி அனுப்புமாறும் உத்தரவிட்டனா்.

இதையடுத்து, 2 பெண் காவலா்கள் உள்ளிட்ட 5 போலீஸாா் தமிழகத்தில் இருந்து ஆந்திரம் நோக்கி சென்று கொண்டிருந்த எரிவாயு டேங்கா் லாரிகள், காய்கறி ஏற்றப்பட்ட லாரிகள், காா்கள் ஆகியவற்றில் 2-4 போ்களாக வாகனங்களில் ஏற்றினா். இவ்வாறு செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை 200-க்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தி அவற்றில் ஆந்திரம் செல்ல வேண்டியவா்களை அனுப்பி வைத்தனா்.

அவா்கள் தமிழக போலீஸாருக்கு நன்றி தெரிவித்துச் சென்றனா். மனிதாபிமானம் காட்டிய தமிழக போலீஸாரின் இச்செயலை அறிந்து பொதுமக்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com