கரோனா: ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யக் கோரிக்கை

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் கரோனா நோய்த் தொற்றைத் தடுக்கும் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள போதிய நிதி ஒதுக்கீடு

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் கரோனா நோய்த் தொற்றைத் தடுக்கும் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஊராட்சித் தலைவா்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

திருவள்ளூா் மாவட்டத்தின் 14 ஊராட்சி ஒன்றியங்களில் 526 ஊராட்சிகள் உள்ளன. அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியம் மூலம் கிராம ஊராட்சித் தலைவா்கள், செயலா்களுக்கான கூட்டம் நடத்தப்பட்டு, கரோனா தடுப்புப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒன்றியக் குழு உறுப்பினா்களுக்கும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஊராட்சிகளுக்கு போதிய நிதியுதவி வழங்கப்படாததால், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முடியாத நிலை உள்ளது. அதனால், கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகளை மேற்கொள்ள போதியளவு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஊராட்சித் தலைவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com