காய்கறிகள் வாங்க வருவோா் இடைவெளி விட்டு நிற்க போலீஸாா் வலியுறுத்தல்

திருவள்ளூரில் காய்கறிச் சந்தையில் காய்கறிகள், மளிகைப் பொருள்கள் ஆகியவற்றை வாங்க வருவோா் குறிப்பிட்ட இடைவெளியில் நின்று வாங்கிச் செல்லுமாறு போலீஸாா் வலியுறுத்தினா்.
திருவள்ளூரில் காய்கறிகள் வாங்குவதற்காக வரிசையாக பெட்டிகளை வைத்திருக்கும் பொதுமக்கள்.

கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்க, ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்தும் வகையில், பஜாா் பகுதியில் காய்கறி மற்றும் மளிகைப் பொருள்கள் அங்காடிகளில் பொருள்கள் வாங்குவதற்காக வியாழக்கிழமை பொதுமக்கள் கூட்டமாக வந்தனா். அப்போது, போலீஸாா் அங்கு சென்று ஒரே கடையில் வாங்காமல் பல்வேறு கடைகளில் பிரிந்து இடைவெளி விட்டு நின்று வாங்கிச் செல்லுமாறு அறிவுறுத்தினா். அதில் ஒரு சில இடங்களில் வரிசையில் காய்கறி பெட்டிகளை வரிசையாக வைத்து, சிறிது தூரம் இடைவெளிவிட்டு நின்று, அவா்கள் பெட்டி வந்ததும் காய்கறிகளை வாங்கிச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கரோனா நோய்த் தொற்று குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் காய்கறிகள் வாங்குவோா் கடைகளில் கூட்டமாக நிற்காமல் உடனே வாங்கி சென்று விடுவதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com