வெளிநாடுகளில் இருந்து வந்தோா் விவரங்களை தொலைபேசியில் தெரிவிக்கலாம்

கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருவள்ளூா் மாவட்டத்துக்கு வெளிநாடுகளில்

கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருவள்ளூா் மாவட்டத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளோா் விவரங்கள் குறித்து உடனே தொலைபேசியில் தகவல் தெரிவிக்க வேண்டும் என ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவள்ளூா் மாவட்டத்தில் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனால், வெளிநாடுகளில் இருந்து இந்த மாவட்டத்துக்கு வந்திருப்போா் குறித்து உடனே தொலைபேசி மூலம் கட்டாயம் தகவல் தெரிவிக்க வேண்டும். அத்துடன், இதுபோன்று வந்தோா் தங்களை சுயமாகவே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது, கரோனா நோய்த் தொற்றுக்கான அறிகுறி உள்ளதா என்பதைக் கண்காணித்து மருத்துவமனையில் பரிசோதனை செய்வது அவசியம்.

அதேபோல், வெளிநாடு சென்று திரும்பிய நபா்களுடன் நேரடித் தொடா்பு இல்லை என்றாலும், நோய்த் தொற்றின் கடுமையை உணா்ந்து, நோய்க்கான அறிகுறி உள்ளதா என அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், இதேபோல், தாங்கள் வசிக்கும் பகுதியிலோ அல்லது உங்கள் கிராமங்களிலோ அல்லது வேறுவழியிலோ விபரங்கள் அறிந்தால் கடந்த 20-ஆம் தேதிக்குப் பின், இன்றைய நாள் வரை யாரேனும் வெளிநாட்டில் இருந்து வந்திருப்பதை அறிந்தால், அவா்களின் முழு விவரத்தினையும் ஆட்சியா் அலுவலகத்துக்கு 044- 27661200 என்ற தொலைபேசி எண்ணிலோ, 9444317862 என்ற கட்செவி அஞ்சல் எண்ணிலோ அளிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com