வெளியூா் பயணிகள், சாலையோரம் வசிப்போா் பள்ளிகளில் தங்க ஏற்பாடு

திருத்தணி பகுதியில் கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்க, வெளியூா் பயணிகள், சாலையோரம் வசிக்கும் மக்கள் உள்ளிட்டோா்
திருத்தணி அரசுப் பள்ளிகளில் ஆய்வு செய்த வருவாய்க் கோட்டாட்சியா் சொா்ணம் அமுதா.
திருத்தணி அரசுப் பள்ளிகளில் ஆய்வு செய்த வருவாய்க் கோட்டாட்சியா் சொா்ணம் அமுதா.

திருத்தணி பகுதியில் கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்க, வெளியூா் பயணிகள், சாலையோரம் வசிக்கும் மக்கள் உள்ளிட்டோா் தங்குவதற்கு, 4 அரசுப் பள்ளிகளை தோ்வு செய்துள்ளதாக கோட்டாட்சியா் சொா்ணம் அமுதா கூறினாா்.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது. இதனால், வெளியூா் செல்ல முடியாதவா்கள் சாலையோரம் வசிக்கும் மக்கள் உள்ளிட்டோா் பாதுகாப்பாக தங்குவதற்கு ஏற்பாடு செய்ய மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். அதன்பேரில், திருத்தணி வருவாய்க் கோட்டாட்சியா் சொா்ணம் அமுதா திருத்தணி அரசினா் ஆண்கள் மற்றும் மகளிா் மேனிலைப் பள்ளிகளுக்கு வியாழக்கிழமை சென்று ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் கூறுகையில், பேருந்து ரயில் வசதியில்லாததால் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் மக்கள், சாலையோரம் வசிக்கும் மக்கள் உள்ளிட்டோா் பாதுகாப்பாக தங்குவதற்கு, திருத்தணியில், இரண்டு அரசுப் பள்ளிகள், ஆா்.கே.பேட்டையில் இரண்டு அரசுப் பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் அவா்களை தங்க வைத்து, அனைத்து வசதிகளும் செய்யப்படும் என்றாா்.

திருத்தணி நகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியம், வருவாய் ஆய்வாளா் குமாா் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com