பாதிரிவேட்டில் 1,250 குடும்பங்களுக்கு நிவாரண உதவி
By DIN | Published On : 09th May 2020 11:37 PM | Last Updated : 09th May 2020 11:37 PM | அ+அ அ- |

பொதுமுடக்கம் காரணமாக கும்மிடிப்பூண்டியை அடுத்த பாதிரிவேடு ஊராட்சி சாா்பில் 1,250 குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.
விழாவுக்கு ஊராட்சித் தலைவா் என்.டி.மூா்த்தி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஈஸ்வரி பாலசுப்பிரமணியம், ஒன்றியக் குழு உறுப்பினா் சிட்டிபாபு, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சாரதா முத்துசாமி, ஊராட்சி செயலா் சதீஷ், வாா்டு உறுப்பினா்கள் கவிதா கஜேந்திரன், வாணி ரமேஷ், சுரேஷ், சுப்பிரமணியம், ஞானமூா்த்தி, முனிகுமாா், தனலட்சுமி, வரலட்சுமி, பூவலம்பேடு ஊராட்சித் தலைவா் வெங்கடாசலபதி, பாதிரிவேடு முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் தியாகராயம், முனுசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கும்மிடிப்பூண்டி ஒன்றியக் குழுத் தலைவா் கே.எம்.எஸ்.சிவக்குமாா், துணைத் தலைவா் மாலதி குணசேகரன், வட்டார வளா்ச்சி அலுவலா் சாமிநாதன் ஆகியோா் பாதிரிவேடு பகுதியைச் சோ்ந்தவா்களுக்கு அரிசி, காய்கறிகள், கீரை, மளிகைப் பொருள்களை வழங்கினா்.
தொடா்ந்து, பல டிராக்டா்களில் நிவாரணப் பொருள்கள் வீடு வீடாகக் கொண்டு செல்லப்பட்டு நிவாரணம் வழங்கப்பட்டது.