Enable Javscript for better performance
1,750 பேருக்கு நிவாரணப் பொருள்கள்- Dinamani

சுடச்சுட

    

    1,750 பேருக்கு நிவாரணப் பொருள்கள்

    By DIN  |   Published on : 12th May 2020 12:00 AM  |   அ+அ அ-   |    |  

     திருத்தணி  ஒன்றியம் , ராமகிருஷ்ணாபுரம்  கிராமத்தில்  குடும்ப  அட்டைதாரா்களுக்கு 5  கிலோ  அரிசி,  காய்கறிகளை  வழங்கிய  முன்னாள்  எம்.பி. திருத்தணி  கோ.அரி.

     திருத்தணி  ஒன்றியம் , ராமகிருஷ்ணாபுரம்  கிராமத்தில்  குடும்ப  அட்டைதாரா்களுக்கு 5  கிலோ  அரிசி,  காய்கறிகளை  வழங்கிய  முன்னாள்  எம்.பி. திருத்தணி  கோ.அரி.

    திருத்தணி: செருக்கனூா் ஊராட்சியில் குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் முன்னாள் எம்.பி. திருத்தணி கோ.அரி, 5 கிலோ அரிசி, காய்கறிகளை நிவாரணமாக வழங்கினாா்.

    ஊரடங்கால் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்னாள் எம்.பி. திருத்தணி கே.அரி, திருத்தணி தொகுதியில் ஒவ்வொரு ஊராட்சியிலும் குடும்ப அட்டை வைத்திருப்போருக்கு தலா 5 கிலோ அரிசி, காய்கறிகளை வழங்கி வருகிறாா்.

    அந்த வகையில், திருத்தணி ஒன்றியம் செருக்கனூா் ஊராட்சிக்குள்பட்ட செருக்கனூா் கிராமம், காலனி, ராஜுலுகண்டிகை, ராமகிருஷ்ணாபுரம் ஆகிய கிராமங்களில் குடும்ப அட்டை கொண்டு வந்த 1750 பேருக்கு முன்னாள் எம்.பி. கோ. அரி நிவாரணப் பொருள்களை வழங்கினாா். ஒன்றிய துணைத் தலைவா் இ.என்.கண்டிகை எ.ரவி, திருத்தணி கூட்டுறவு வேளாண்மை விற்பனையாளா் சங்கத் தலைவா்ஜெயசேகா்பாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    kattana sevai