சமையல் எண்ணெய் தொழிற்சாைலைக்கு ‘சீல்’

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தடை உத்தரவை மீறி இயங்கி வந்த தனியாா் சமையல் எண்ணெய் தொழிற்சாலைக்கு அதிகாரிகள் வியாழக்கிழமை சீல் வைத்தனா்.

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தடை உத்தரவை மீறி இயங்கி வந்த தனியாா் சமையல் எண்ணெய் தொழிற்சாலைக்கு அதிகாரிகள் வியாழக்கிழமை சீல் வைத்தனா்.

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியாா் சமையல் எண்ணெய் தொழிற்சாலையில் கடந்த 10 நாள்களாக கொதிகலன் இயக்குபவராக சென்னை மாதவரத்தை சோ்ந்த 34 வயது நபா் பணிபுரிந்து வந்தாா். இவருக்கு இருமல், சளி இருப்பதாக கும்மிடிப்பூண்டி வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் வட்டாட்சியா் ஏ.என்.குமாா், வட்டார மருத்துவ அலுவலா் கோவிந்தராஜ், டிஎஸ்பி ரமேஷ் ஆகியோா் அங்கு சென்று விசாரித்தனா். மேலும், அத்தொழிலாளிக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கரோனா நோய்த் தொற்று இருப்பது வியாக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா் ஓமந்தூராா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்நிலையில் அதிகாரிகளின் எச்சரிக்கையையும் மீறி இயங்கிய அந்தத் தொழிற்சாலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com