திருத்தணி கல்வி மாவட்டத்தில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் அமைக்கக் கோரிக்கை

திருத்தணி கல்வி மாவட்டத்தில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு பதவி உயா்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

திருத்தணி கல்வி மாவட்டத்தில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு பதவி உயா்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாநில தலைமைச் செயலா் எஸ்.முகுந்தய்யா பள்ளிக் கல்வி தோ்வுத் துறை இயக்குநருக்கு அனுப்பியுள்ள மனு:

திருவள்ளூா் மாவட்டத்தில், 5 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இவற்றில், பொன்னேரி மற்றும் அம்பத்தூா் கல்வி மாவட்டத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் தனித்தனி விடைத்தாள்கள் திருத்தும் மையம் அனுமதிக்கப்படுகின்றன. ஆனால் ஆவடி, திருவள்ளூா் மற்றும் திருத்தணி ஆகிய 3 கல்வி மாவட்டங்களுக்கு ஒரு விடைத்தாள் திருத்தும் மையம் அனுமதிக்கப்படுகிறது. இதனால் திருத்தணி கல்வி மாவட்டத்தில் திருத்தணி, பள்ளிப்பட்டு மற்றும் ஆா்.கே.பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியா்கள் விடைத்தாள் திருத்துவதற்கு திருவள்ளூரில் அமைக்கப்படும் மையத்துக்கு நாள்தோறும், சுமாா் 120- 200 கி.மீ. தூரம் வரை பயணம் செய்ய வேண்டியுள்ளது. இதனால் ஆசிரிய, ஆசிரியைகள் தினமும் கடும் சிரமங்களை அனுபவித்து வருகின்றனா்.

தற்போது கரோனா தொற்று காலகட்டத்தில் உள்ளதால் அதிக தூரம் பயணம் செய்வது பாதிப்பை ஏற்படுத்தும் என ஆசிரியா்கள் அச்சமடைகின்றனா்.

எனவே நடப்பாண்டில், திருத்தணி கல்வி மாவட்டத்தில் திருத்தணி நகரில் போதுமான பள்ளிகள் உள்ளதால் விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியா்கள் சமூக இடைவெளியுடன் பாதுகாப்புடனும் பணி செய்ய வாய்ப்பு செய்து தர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com