முதியோர் இல்லத்திற்கு நிவாரணமாக ஒரு மாதத்திற்கான உணவு பொருள்கள் வழங்கல்

திருவள்ளூர் அருகே செயல்பட்டு வரும் ஹூண்டாய் மொபைஸ் நிறுவனம் சார்பில் முதியோர் இல்லத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான 3 குவின்டால் அரிசி, மளிகை பொருள்கள், பழவகைகளையும் வழங்கினர்.
முதியோர் இல்லத்திற்கு நிவாரணமாக ஒரு மாதத்திற்கான உணவு பொருள்கள் வழங்கல்

திருவள்ளூர் அருகே செயல்பட்டு வரும் ஹூண்டாய் மொபைஸ் நிறுவனம் சார்பில் முதியோர் இல்லத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான 3 குவின்டால் அரிசி, மளிகை பொருள்கள், பழவகைகளையும் வழங்கினர்.

திருவள்ளூர் அருகே கீழச்சேரி ஊராட்சியைச் சேர்ந்த கோவிந்தமேடு கிராமத்தில் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு தங்கியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் பொது முடக்கத்தால் முதியோர்கள் பாதிக்கப்படக்கூடாது. இதற்காக அப்பகுதியில் உள்ள உளுந்தை கிராம ஊராட்சி தலைவர் ரமேஷ் திருவள்ளூர் அருகே செயல்பட்டு வரும் ஹூண்டாய் மொபைஸ் நிறுவனத்தை அணுகினார். 

அதன் அடிப்படையில் கிராமத்தில் உள்ள நலிவடைந்தோர் மற்றும் முதியோர் இல்லத்திற்கும் கரோனா நிவாரண உதவி வழங்கவும் முன்வந்தனர்.
 அதன் அடிப்படையில் கோவிந்தமேடு முதியோர் இல்லத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான 3 குவின்டால் அரிசி, 30 லிட்டர் சமையல் எண்ணைய், 30 கிலோ பருப்பு, மளிகை பொருள்கள், ரொட்டி மற்றும் பழவகைகளையும் ஹூண்டாய் நிறுவனத்தின் நிர்வாககிள் ஊராட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வழங்கப்பட்டது. 

அதற்கு முன்னதாக உளுந்தை கிராமத்தில் நலிவடைந்த குடும்பங்களைச் சேர்ந்த 400 பேருக்கு 10 கிலோ அரிசி பை மற்றும் ரூ.1000 மதிப்பிலான சமையல் எண்ணைய், மளிகை பொருள்கள், கிருமி நாசினி, கைகழுவ சோப்பு ஆகியவையும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர்கள் ரமேஷ்(உளுந்தை) தேவா(கீழச்சேரி), வசந்தி வெங்கடேசன்(சத்தரை) மற்றும் ஹூண்டாய் மொபைஸ் நிறுவனத்தின் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com