Enable Javscript for better performance
மகளிர் குழு மூலம் மாம்பழ விற்பனை: ஆட்சியர் தொடக்கி வைத்தார்- Dinamani

சுடச்சுட

    

    மகளிர் குழு மூலம் மாம்பழ விற்பனை: ஆட்சியர் தொடக்கி வைத்தார்

    By DIN  |   Published on : 19th May 2020 03:03 AM  |   அ+அ அ-   |    |  

    திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மகளிர் குழு மூலம் நடமாடும் வாகனத்தில் மாம்பழ விற்பனையைத் தொடக்கி வைத்த ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார்.      

    திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மகளிர் குழு மூலம் நடமாடும் வாகனத்தில் மாம்பழ விற்பனையைத் தொடக்கி வைத்த ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார்.      


    திருவள்ளூர்: திருவள்ளூரில் வேளாண் உழவர் உற்பத்தியாளர் குழுக்களிடம் இருந்து நேரடியாக மாம்பழங்களை கொள்முதல் செய்து, மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் நகராட்சிப் பகுதிகளில் ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் விற்பனையைத் தொடக்கி வைத்தார்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 13 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பல்வேறு வகையான மா வகைகள் சாகுபடி  செய்யப்பட்டுள்ளன. 

    தற்போது, இப்பகுதியில் மாம்பழ சீசனும் தொடங்கியுள்ளது. இதனால் மாம்பழ விவசாயிகளின் நலன் கருதி, உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

    இந்த உற்பத்தியாளர் குழுக்களிடம் இருந்து மாம்பழ வகைகள் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் கொள்முதல் செய்யப்படுகிறது. அதைத் தொடர்ந்து, மாம்பழங்களை மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம்  நகராட்சி மற்றும் மாநகராட்சியிலும் நடமாடும் வாகனம் மூலம் நேரில் விற்பனை செய்ய நடவடிக்கை  எடுக்கப்பட்டு வருகிறது.   இதில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உழவர்  உற்பத்தியாளர்கள் குழுக்களிடம் கொள்முதல் செய்த மாம்பழங்களை மகளிர் குழுக்கள் மூலம் விற்பனையைத் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தலைமை வகித்து,  மாம்பழ விற்பனையைத் தொடக்கி வைத்தார். 

    பின்னர் அவர் கூறுகையில், இந்த  மாம்பழங்கள் நியாயமான விலையில் வைக்கோல் கொண்டு இயற்கையாக கனிய வைக்கப்பட்டது.  எனவே மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் கரோனா பாதிப்பு பகுதிகளில் நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. இதை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், வேளாண்மைத் துறை துணை இயக்குநர் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai