புலம்பெயர்ந்த செங்கல்சூளை தொழிலாளர்கள் 2 ஆயிரம் பேருக்கு நிவாரண உதவி

திருவள்ளூர் பகுதிகளில் புலம்பெயர்ந்த செங்கல் சூளை தொழிலாளர்கள் 2 ஆயிரம் பேருக்கு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் கரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.
புலம்பெயர்ந்த செங்கல்சூளை தொழிலாளர்கள் 2 ஆயிரம் பேருக்கு நிவாரண உதவி

திருவள்ளூர் பகுதிகளில் புலம்பெயர்ந்த செங்கல் சூளை தொழிலாளர்கள் 2 ஆயிரம் பேருக்கு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் கரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

தற்போதைய நிலையில் கரோனா நோய் தொற்றை தவிர்க்கும் வகையில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், நாள்தோறும் வேலைக்கு சென்று, அதில் கிடைக்கும் கூலியை வைத்து குடும்பம் நடத்தி வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதோடு, அன்றாட உணவுக்கு மிகவும் அவதிக்குள்ளாகி வரும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மாவட்ட நிர்வாக அனுமதியுடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, ஐ.ஆர்.சி.டி.எஸ் மற்றும் இந்திய எழுத்தறிவு திட்டம் மூலம் கரோனா நிவாரண உதவிகள் வழங்கவும் முன்வந்தது.

இதன் அடிப்படையில் திருவள்ளூர் அருகே சிவன்வாயல் கிராமத்தில் உள்ள செங்கல் சூளைகளைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செந்தில், இந்திய எழுத்தறிவு திட்டத்தின் தேசிய மேலாளர் ஏ.எல்.ரங்கராஜன் மற்றும் தொண்டு நிறுவன நிர்வாகிகள் ஆகியோர் புலம் பெயர்ந்த செங்கல்சூளை தொழிலாளர்களுக்கு அரிசி, பருப்பு, மளிகை பொருள்கள், கிருமி நாசினி மற்றும் முககவசம் ஆகியவைகளையும் வழங்கினார். இதேபோல் புலம் பெயர்ந்த செங்கல்சூளை தொழிலாளர்கள் 2 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் முனிரத்தினம் மற்றும் தனியார் தொண்டு நிறுவன பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com