தானியங்கி பால் சேகரிப்பு கருவி கூடுதலாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

உற்பத்தியாளர்களிடம் தரமான பால் கொள்முதல் செய்யும் வகையில் கூடுதலாக தானியங்கி பால் சேகரிப்பு கருவி கூடுதலாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என
தானியங்கி பால் சேகரிப்பு கருவி கூடுதலாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

உற்பத்தியாளர்களிடம் தரமான பால் கொள்முதல் செய்யும் வகையில் கூடுதலாக தானியங்கி பால் சேகரிப்பு கருவி கூடுதலாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தின் நிர்வாக குழு தலைவர் வேலஞ்சேரி சந்திரன் தெரிவித்தார்.   

திருவள்ளூர் அருகே காக்களூரில் ஆவின் வளாகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் சார்பில் பால் பண்ணை பணியாளர்கள் மற்றும் சங்க செயலாளர்கள் பாதுகாப்பிற்காக முககவசம், கிருமி நாசினி, கபசுர குடிநீர் மற்றும் பால் கூட்டுறவு சங்கங்களுக்கு தேசிய பால் வள மேம்பாட்டுத் திட்டம் மூலம் தானியங்கி பால் சேகரிப்பு கருவி ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தின் பொது மேலாளர் நடராஜன் தலைமை வகித்தார். இதில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய நிர்வாக குழு தலைவர் வேலஞ்சேரி சந்திரன் கலந்து கொண்டு பேசுகையில், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியம் மூலம் 560 பால் உற்பத்தியாளர் சங்கங்களின் மூலம் நாள்தோறும் 1.25 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. 

இந்த நிலையில் பொதுமுடக்கத்திற்கு முன்பு 1.03 லட்சம் லிட்டர் பால் கொள்முதலாக இருந்தது. இந்த நிலையில் பால் உற்பத்தியாளர்களுக்கு நிரந்தர வருவாய் ஆதாரம் ஏற்படுத்தும் நோக்கத்தில் கிராமங்களில் 20 எண்ணிக்கையில் புதிய பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கூடுதலாக 22 ஆயிரம் லிட்டர் பால் அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், நுகர்வோர்களின் பால் மற்றும் பால் உபபொருள்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆவின் முகவர்கள் நியமித்து பால் பொருள்கள் விற்பனைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமுடக்கத்திற்கு முன்பு நாள்தோறும் சராசரியாக 43 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டது. தற்போதைய நிலையில் விதிமுறைகள் தளர்த்தப்பட்ட நிலையில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 57 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


பால் உற்பத்தியாளர்களின் தரமான பால் உற்பத்தி செய்யும் வகையில் தேசிய பால்வள மேம்பாட்டு திட்டம் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இத்திட்டம் சார்பில் கடந்த 2017-18 இல் இந்த ஒன்றியத்திற்கு 20 எண்ணிக்கையில் தானியங்கி பால் சேகரிப்பு கருவி 100 சதவீத மானியத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கும் தலா 10 வழங்கப்பட்டுள்ளது. இந்த கருவியின் விலை 1.28 லட்சம் ஆகும். எனவே தேசிய பால் வள மேம்பாட்டுத் திட்டம் மூலம் வழங்கப்பட்ட தானியங்கி பால் சேகரிப்பு கருவிகளின் மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும். இந்த கருவி சங்கங்களுக்கு வழங்குவதன் மூலம் உற்பத்தியாளர்களிடம் இருந்து தரமான பாலை கொள்முதல் செய்யலாம். அதனால் வருங்காலங்களில் கூடுதலாக தானியங்கி பால் சேகரிப்பு கருவி கூடுதலாகவும் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அதைத்தொடர்ந்து பால் பண்ணை தொழிலாளர்கள், சங்க செயலாளர்கள் ஆகியோருக்கு கிருமி நாசினி, முககவசங்களையும், பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திற்கு தானியங்கி பால் சேகரிப்பு கருவி ஆகியவைகளையும் அவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் துணைப்பதிவாளர்(பால்வளம்) ஸ்ரீகலா, ஒனறிய நிர்வாக குழு துணைத்தலைவர் ஏழுமலை மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com