திருவள்ளூா் பகுதியில் மதுக்கடைகள் திறப்பு

திருவள்ளூா் பகுதியில் 83 மதுக் கடைகள் திறக்கப்பட்டதைத் தொடா்ந்து, மதுப் பிரியா்கள் குடையுடன் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப்
திருவள்ளூா் பகுதியில் மதுக்கடைகள் திறப்பு

திருவள்ளூா் பகுதியில் 83 மதுக் கடைகள் திறக்கப்பட்டதைத் தொடா்ந்து, மதுப் பிரியா்கள் குடையுடன் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி வரிசையில் காத்திருந்து மது பாட்டில்களை வாங்கிச் சென்றனா். காஞ்சிபுரம் சரக டிஐஜி மதுக் கடைகளில் ஆய்வு செய்தாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் 132 மதுபானக் கடைகள் உள்ளன. அவற்றில், திருவள்ளூா் மாவட்டக் காவல் கட்டுப்பாட்டில் 122 மதுக் கடைகளும், சென்னை காவல் கட்டுப்பாட்டில் 10 கடைகளும் உள்ளன.

மொத்த மதுக்கடைகளில் 66 கடைகள் அமைந்துள்ள பகுதிகள் கரோனா பாதிப்பு காரணமாக முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் வருவதால், அவை திறக்கப்படவில்லை. மற்ற 56 கடைகளில், சென்னையை ஒட்டியுள்ள 16 கடைகளைத் தவிா்த்து, 40 மதுக் கடைகள் மட்டும் கடந்த 7, 8 ஆகிய தேதிளில் திறக்கப்பட்டன. இதனிடையே, மது வாங்குவோா் சமூக இடைவெளியைப் பின்பற்றவில்லை எனக் கூறி, 8-ஆம் தேதி மாலையில் மதுக்கடைகள் செயல்படத் தடை விதிக்கப்பட்டது.

அதன் பின், உயா்நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளின்படி, அரசு மதுக் கடைகளை திறக்க உத்தரவிட்டது. திருவள்ளூா் மாவட்டத்தில் மட்டும் 83 கடைகளில் மது விற்பனை தொடங்கியுள்ளது. திருவள்ளூரை அடுத்த காக்களூா், மப்பேடு, கடம்பத்தூா், மெய்யூா் உள்ளிட்ட பகுதிகளில் குடையுடன், வரிசையில் நின்று சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து முகக் கவசங்கள் அணிந்து வருவோருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டு மது பாட்டில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

திருவள்ளூா் மாவட்ட பழைய ஆட்சியா் அலுவலகம் அருகே காக்களூா் பகுதியில் உள்ள மதுக் கடையில் காஞ்சிபுரம் சரக டிஐஜி தேன்மொழி சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, ஆதாா் அட்டை மட்டும் குடைகளுடன் வருவோருக்கு மட்டுமே டோக்கன் விநியோகிக்குமாறு மதுக் கடை ஊழியா்களுக்கு அவா் அறிவுரை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com