தமிழகத்திற்கு ஒரு லட்சம் லட்டு அனுப்ப தேவஸ்தானம் ஆலோசனை

திருமலையிலிருந்து தமிழக பக்தர்களுக்கு ஒரு லட்சம் லட்டு அனுப்ப தேவஸ்தானம் ஆலோசனை செய்து வருகிறது.
தமிழகத்திற்கு ஒரு லட்சம் லட்டு அனுப்ப தேவஸ்தானம் ஆலோசனை

திருப்பதி: திருமலையிலிருந்து தமிழக பக்தர்களுக்கு ஒரு லட்சம் லட்டு அனுப்ப தேவஸ்தானம் ஆலோசனை செய்து வருகிறது.

திருமலை ஏழுமலையான் தரிசனம் கிடைக்கும் வரை திருமலை திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் அனுப்ப முடிவு செய்தது. அதன்படி திங்கட்கிழமை முதல் ஆந்திராவில் 13 மாவட்டங்களில் உள்ள தேவஸ்தான தகவல் மையங்களில் விற்பனைக்கு வைத்தது. 

இதற்கு பக்தர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. விற்பனை தொடங்கிய 3 மணிநேரத்தில் 2.4 லட்டுக்கள் விற்ற தீர்ந்தது. குண்டூரில் மட்டும் தேவஸ்தான கல்யாண மண்டபம் உள்ள பகுதி சிகப்பு மண்டலத்திற்குள் உள்ளதால் வரும் 30ம் தேதிக்கு பின் லட்டு விற்பனை தொடங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. விரைவாக கூடுதலாக 2 லட்சம் லட்டு பிரசாதங்களை தேவஸ்தானம் அனுப்ப உள்ளது.

அதேபோல் தமிழ்நாடு, தெலுங்கானாவிலும் லட்டு விற்பனையை விரைவாக தொடங்க வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அம்மாநில அரசிடமிருந்து அனுமதி கிடைத்தவுடன் தமிழகத்திற்கு ஒரு லட்சம் லட்டு பிரசாதமும், தெலுங்கானாவிற்கு 50 ஆயிரம் லட்டு பிரசாதமும் அனுப்ப தேவஸ்தானம் ஆலோசனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com