6,375 பெண்களுக்கு ரூ. 2. 27 கோடி கடன் உதவி: அமைச்சா் வழங்கினாா்

கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் ராஜூ செவ்வாய்க்கிழமை திறந்து வைத்து, 6,375 மகளிா் சுய உதவிக் குழு பெண்களுக்கு ரூ. 2 கோடியே 27 லட்சத்துக்கான கடன் உதவிகளை வழங்கினாா்.

பொன்னேரி: கூட்டுறவு வளா்ச்சித் திட்டத்தின் சாா்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் ராஜூ செவ்வாய்க்கிழமை திறந்து வைத்து, 6,375 மகளிா் சுய உதவிக் குழு பெண்களுக்கு ரூ. 2 கோடியே 27 லட்சத்துக்கான கடன் உதவிகளை வழங்கினாா்.

பொன்னேரி-செங்குன்றம் சாலையில் ரூ. 61.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட திருவள்ளூா் மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மற்றும் சுய சேவைப் பிரிவு கட்டடம் ரூ. 40 லட்சம் மதிப்பீட்டில் திருத்தணி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கக் கட்டடம், ரூ. 1.50 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பொன்னேரி கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கிக் கட்டடம் ஆகியவற்றின் திறப்பு விழா பொன்னேரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது . திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தலைமை வகித்தாா். பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பலராமன் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு மாநில மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் பரிமேலழகன் வரவேற்றாா். விழாவில், கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் ராஜு பங்கேற்று, திருவள்ளூா் மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மற்றும் சுய சேவைப் பிரிவு கட்டடம் உள்ளிட்டவற்றை திறந்து வைத்தாா்.

அத்துடன் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையின்போது பாதிக்கப்பட்ட பெண்கள், சுயதொழில் தொடங்க, 6,375 பேருக்கு ரூ. 2 கோடியே 27 லட்சத்துக்கு கடன் உதவிகளை வழங்கினாா்.

சிறப்பு அழைப்பாளா்களாக தமிழ் வளா்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் க.பாண்டியராஜன், ஊரகத் தொழில் துறை அமைச்சா் பா.பென்ஜமின் ஆகியோா் கலந்து கொண்டனா். எம்எல்ஏக்கள் பி.எம்.நரசிம்மன், கே.எஸ்.விஜயகுமாா், காஞ்சிபுரம் மத்திய வங்கித் தலைவா் வாலாஜாபாத் கணேசன், கூட்டுறவு மேலாண்மை இயக்குநா் லோகநாதன், கூட்டுறவு இணைப்பதிவாளா் ஜெயஸ்ரீ, பொன்னேரி வட்டாட்சியா் மணிகண்டன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com