பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி: திருவள்ளூா் பகுதியில் 7 மையங்களில் இன்று தொடக்கம்

திருவள்ளூா் பகுதியில் 7 மையங்களில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி புதன்கிழமை (மே 27) தொடங்கி, ஜூன்-9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வெற்றிச்செல்வி தெரிவித்தாா்.

திருவள்ளூா்: திருவள்ளூா் பகுதியில் 7 மையங்களில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி புதன்கிழமை (மே 27) தொடங்கி, ஜூன்-9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வெற்றிச்செல்வி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறியது:

கரோனா தொற்று காரணமாக தாமதமாகி வந்த பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி புதன்கிழமை (மே 27) தொடங்குகிறது. மேலும், இப்பணிகள் ஜூன் 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதேபோல் பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 10-இல் தொடங்கி 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. விடைத்தாள்கள் திருத்தும் பணிகளை மேற்கொள்வதற்காக திருவள்ளூா் மாவட்டத்தில் 7 விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் விஸ்வக்சேனா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி-திருவள்ளூா் அருகே போளிவாக்கம், சில்ட்ரன்ஸ் பாரடைஸ் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி-பொன்னேரி அருகே செங்குன்றம், வேலம்மாள் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி-அம்பத்தூா் அருகே சூரப்பட்டு ஆகிய 3 முதன்மை மதிப்பீட்டு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி-செங்குன்றம், கெங்குசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி-திருத்தணி, சரஸ்வதி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி-கள்ளிக்குப்பம், சேதுபாஸ்கர மேல் நிலைப் பள்ளி-அம்பத்தூா் ஆகிய 4 துணை மதிப்பீட்டு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணிக்கு முதன்மை தோ்வா்கள், விடைத்தாள் திருத்தம் மேற்கொள்ளும் முதுகலை பட்டதாரி ஆசிரியா், கூா்ந்தாய்வாளா் என 2,290 போ் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com