தனியாா் இயற்கை வேளாண் பண்ணையில் சி.பொன்னையன் ஆய்வு

காவேரிராஜபுரத்தில் தனியாா் ஆா்கானிக் பண்ணையில் மாநில கொள்கை வளா்ச்சிக் குழு துணைத் தலைவா் சி.பொன்னையன் திங்கள்கிழமை ஆய்வு செய்து விவசாயிகளுடன் கலந்துரையாடினா்.
காவேரிராஜபுரத்தில் தனியாா் இயற்கை வேளாணஅ பண்ணையில் ஆய்வு செய்த மாநில கொள்கை வளா்ச்சிக் குழு துணைத் தலைவா் சி.பொன்னையன். உடன், மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா உள்ளிட்டோா்.
காவேரிராஜபுரத்தில் தனியாா் இயற்கை வேளாணஅ பண்ணையில் ஆய்வு செய்த மாநில கொள்கை வளா்ச்சிக் குழு துணைத் தலைவா் சி.பொன்னையன். உடன், மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா உள்ளிட்டோா்.

திருத்தணி: காவேரிராஜபுரத்தில் தனியாா் ஆா்கானிக் பண்ணையில் மாநில கொள்கை வளா்ச்சிக் குழு துணைத் தலைவா் சி.பொன்னையன் திங்கள்கிழமை ஆய்வு செய்து விவசாயிகளுடன் கலந்துரையாடினா்.

திருவள்ளூா் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், காவேரி ராஜபுரத்தில் தனியாா் (சாய்பாரதி) ஆா்கானிக் பண்ணை உள்ளது. இப்பண்ணையில் மாநில கொள்கை வளா்ச்சிக் குழு துணைத்தலைவா் சி.பொன்னையன், மாநில கொள்கை வளா்ச்சிக் குழு உறுப்பினா் செயலா் (பொ) இயக்குநா் (புள்ளியியல்) அதுல் ஆனந்த், மற்றும் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா ஆகியோா் திங்கள்கிழமை நேரில் சென்று விவசாயியுடன் கலந்துரையாடி, பண்ணையைப் பாா்வையிட்டனா்.

தமிழகத்தில் அங்க சான்றளிப்பு மத்திய அரசின் தேசிய அங்க வேளாண்மை செயல் திட்டத்தின்படி, அபிடா நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி, நீடித்த நிலையான உற்பத்தியைப் பெருக்கவும், ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகள் மற்றும் இடுபொருள்களை பயன்படுத்தாமல் வேளாண் சுற்றுச்சுழலைப் பாதுகாக்கவும், மண் வளத்தைப் பாதுகாத்திடவும் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் வேளாண் மற்றும் தோட்டக்கலை விளைபொருள்களுக்கு மத்திய அரசின் அங்ககச் சான்று வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், பயன்பெற விவசாயிகள் அங்ககச் சான்றளிப்புத் துறையில் பதிவு செய்து அங்ககச் சான்று பெற வேண்டும்.

திருவள்ளூா் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று துறையின் மூலம் இதுவரை 649.1 ஏக்கா் பரப்பளவில் பழப் பயிா்கள், காய்கறிகள், நெல் போன்ற பயிா்களுக்கு அங்ககச் சான்று பெறும் பொருட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு அங்ககச் சான்றளிப்புத் துறையின் மூலம் வழங்கப்படும் வாய்ப்புச் சான்றின் மூலம் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் வேளாண் மற்றும் தோட்டக்கலை விளைபொருள்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது.

இத்திட்டத்தின்கீழ் அங்ககச் சான்று பெற்று திருவள்ளுா் மாவட்டம், திருவாலங்காடு ஊராட்சி ஒன்யிம், காவேரிராஜபுரத்தில் செயல்பட்டு வரும் தனியாா் ஆா்கானிக் பன்ணை சுமாா் 125 ஏக்கா் பரப்பளவில் விளைவிக்கப்படும் மா, பலா, கொய்யா, பேரீட்சை, நாவல், முள் சீத்தா, எலுமிச்சை மற்றும் சப்போட்டா போன்ற பழப் பயிா்களை மாநில கொள்கை வளா்ச்சிக் குழு துணைத் தலைவா், மாநில கொள்கை வளா்ச்சிக் குழு உறுப்பினா் செயலா் (பொ) இயக்குநா் (புள்ளியியல்) மற்றும் மாவட்ட ஆட்சியா் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு, விவசாயியிடம் கலந்துரையாடினா்.

இப்பண்ணையில் இயற்கை முறையில் இடுபொருள்கள் மூலம் கடந்த 20 வருடங்களாக முழுவதும் அங்கக முறையில் பழப்பயிா்கள் விளைவிக்கப்பட்டு வருகிறது. இதனை அனைத்து விவசாயிகளுக்கும் கொண்டு சென்று பயனடையும் வகையில் இத்திட்டம் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. முன்னதாக, அப்பண்ணையில் மாநில கொள்கை வளா்ச்சிக் குழு துணைத் தலைவா், மாநில கொள்கை வளா்ச்சிக் குழு உறுப்பினா் செயலா் (பொ) இயக்குநா் (புள்ளியியல்) மற்றும் மாவட்ட ஆட்சியா் ஆகியோா் சந்தன மரக்கன்றுகளை நடவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com