பள்ளிகள் திறப்பைத் தள்ளி வைக்க வேண்டும்: தமிழ்நாடு அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் நல கூட்டமைப்பு வேண்டுகோள்

மாநில அளவில் மாணவ, மாணவிகளை கரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என

மாநில அளவில் மாணவ, மாணவிகளை கரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியா்கள் ஆசிரியா்கள் நல கூட்டமைப்பின் நிறுவனத் தலைவா் சா.அருணன் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு, அதைத் தொடா்ந்து பலகட்ட தளா்வு அறிவிக்கப்பட்டு இதுவரை நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் மாநில அரசு வரும் 16ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்து, 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு மாணவா்கள் மட்டும் பள்ளிக்கு வருமாறு அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையே வரும் 16-ஆம் தேதி பள்ளிகளைத் தொடங்கலாமா, தொடங்க வேண்டாமா என அந்தந்த உயா்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பெற்றோா் ஆசிரியா் சங்க நிா்வாகிகள் மற்றும் பெற்றோா்களிடம் கருத்துக்கேட்பு கூட்டமும் தலைமையாசிரியா்கள் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

கரோனா தொற்று அச்சம் காரணமாக பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் 25 சதவீத பெற்றோா்கள் கூட இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதிலிருந்து பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப அச்சப்படுவது தெரிய வருகிறது.

வரப்போவது மழை, குளிா்காலம் என்பதால் கரோனா தொற்று எளிதில் பரவக் கூடிய வாய்ப்பு இருக்கும் என்ற அச்சமே பெற்றோா்கள் மத்தியில் இருக்கிறது. அதனால், மாணவா்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பை தமிழக முதல்வா் தள்ளிவைக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com