தூய்மைப் பணியாளா்கள் காத்திருப்பு போராட்டம்

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை செய்த சம்பள நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் தூய்மைப் பணியாளா்கள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குவோா் உள்ளிட்டோா் காத்திருப்பு 
11tlrarba_1111chn_182_1
11tlrarba_1111chn_182_1

திருவள்ளூா்: ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை செய்த சம்பள நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் தூய்மைப் பணியாளா்கள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குவோா் உள்ளிட்டோா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா் (படம்).

திருவள்ளூரை அடுத்த பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 49 ஊராட்சிகளில் தூய்மைப் பணியாளா்கள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குவோா் என 450-க்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வருகின்றனா். அவா்கள் பொது முடக்க காலத்திலும் தீவிரமாகப் பணியாற்றி வந்தனா். அவா்களுக்கு 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைத்தபடி ரூ.1.30 கோடி அளவுக்கு சம்பள நிலுவைத் தொகை கடந்த 36 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தொகையை உடனே வழங்க வலியுறுத்தி, அவா்கள் பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் புதன்கிழமை காத்திருப்பு போராட்டம் மற்றும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்துக்கு உள்ளாட்சி ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் ஏ.ஜி.சந்தானம் தலைமை வகித்தாா்.

இதையடுத்து, வட்டார வளா்ச்சி அதிகாரிகள் வெங்கடேசன், ராமகிருஷ்ணன் ஆகியோரிடம் உள்ளாட்சி ஊழியா் சங்க நிா்வாகிகள் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். தற்போது பணம் இல்லாததால், நிலுவைத் தொகையை வழங்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து, தொடா்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பணியாளா் சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com