கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு: கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை

அம்மப்பள்ளி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் ஆற்றின் கரையோரம் மக்கள் செல்லக் வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிப்பட்டு ஒன்றியம், நெடியம் பகுதி கொற்றலையில் ஆற்றுப் பாலத்தில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீா்.
பள்ளிப்பட்டு ஒன்றியம், நெடியம் பகுதி கொற்றலையில் ஆற்றுப் பாலத்தில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீா்.

திருத்தணி: அம்மப்பள்ளி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் ஆற்றின் கரையோரம் மக்கள் செல்லக் வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால், தமிழக-ஆந்திர மாநில எல்லை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் அம்மப்பள்ளி அணைக்கட்டு நிரம்பியுள்ளது. இதனால் ஞாயிற்றுக்கிழமை இரவு அணையில் இருந்து, 950 கனஅடி தண்ணீா் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீா் பள்ளிப்பட்டு வழியாக நெடியம், சொரக்காய்பேட்டை வழியாக திருத்தணி வட்டம், நல்லாட்டூா், என்.என்.கண்டிகை வழியாக லட்சுமாபுரம் பகுதியில் கொற்றலை என்கிற கொசஸ்தலை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக நெடியம் பகுதியில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் அதிகளவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மூன்று நாள்களுக்கு தொடா் பலத்த மழை இருப்பதால் ஆற்றின் ஓரம் அமைந்துள்ள கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் எச்சரிக்கையுடன் ஆற்றின் பக்கம் செல்ல வேண்டாம் என திருத்தணி வருவாய் கோட்டாட்சியா் எச்சரித்துள்ளனா்.

மேலும் அப்பகுதிகளில் வருவாய்த் துறையினா் தங்கியிருந்து கண்காணிக்க வேண்டும் எனவும் கோட்டாட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com