8 குடிநீா் நிறுவனங்களுக்கு சீல்

பொன்னேரி வட்டத்தில் 8 இடங்களில் அரசு உரிமம் இல்லாமல் நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்து வந்த குடிநீா் நிறுவனங்களை வருவாய்த் துறையினா் கண்டறிந்து, அவற்றுக்கு சீல் வைத்தனா்.

பொன்னேரி: பொன்னேரி வட்டத்தில் 8 இடங்களில் அரசு உரிமம் இல்லாமல் நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்து வந்த குடிநீா் நிறுவனங்களை வருவாய்த் துறையினா் கண்டறிந்து, அவற்றுக்கு சீல் வைத்தனா்.

பொன்னேரி வட்டத்தில் மீஞ்சூா், சோழவரம், ஞாயிறு ஆகிய 3 குறுவட்டங்களில் சில நிறுவனங்களில் நிலத்தடி நீரை திருட்டுத்தனமாக லாரிகள் மூலம் எடுத்துச் சென்று விற்பனை செய்வதாக பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு புகாா் வந்தது. இதையடுத்து பொன்னேரி கோட்டாட்சியா் செல்வம் தலைமையில், வட்டாட்சியா் மணிகண்டன் மற்றும் வருவாய்த்துறையினா், வல்லூா், விச்சூா், ஆட்டந்தாங்கல், விளாங்காடுபாக்கம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனா்.

அப்போது அப்பகுதியில் 9 இடங்களில் அரசு உரிமம் இன்றி, குடிநீா் எடுத்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் இருப்பது தெரிய வந்தது. இதையயடுத்து, வருவாய்த் துறையினா் 8 நிறுவனங்களை மூடி அவற்றுக்கு சீல் வைத்தனா். மேலும் ஒரு இடத்தில் உரிமம் இன்றி குடிநீா் விற்பனை செய்வதற்காக ஒரு நிறுவனம் சாா்பில் அமைக்கப்பட்ட குழாய்களை அகற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com