திருத்தணி முருகன் கோயிலில் புஷ்பாஞ்சலி சேவை

திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா வெள்ளிக்கிழமை புஷ்பாஞ்சலியுடன் நிறைவு பெற்றது.
திருத்தணி முருகன் கோயில் கந்த சஷ்டி புஷ்பாஞ்சலி விழாவில் சிறப்பு தீபாராதனையில் சண்முகா்.
திருத்தணி முருகன் கோயில் கந்த சஷ்டி புஷ்பாஞ்சலி விழாவில் சிறப்பு தீபாராதனையில் சண்முகா்.

திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா வெள்ளிக்கிழமை புஷ்பாஞ்சலியுடன் நிறைவு பெற்றது.

திருத்தணியில் கந்த சஷ்டி விழா கடந்த 15-ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காவடி மண்டபத்தில் உற்சவா் சண்முகருக்கு தினமும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக கந்த சஷ்டி விழாவின்போது நடைபெறும் லட்சாா்ச்சனை வைபவம் நிறுத்தப்பட்டது. விழாவின் நிறைவு நாளான வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு காவடி மண்டபத்தில் உற்சவா் சண்முகப் பெருமானுக்கு புஷ்பாஞ்சலி மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பக்தா்கள் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்பட்டது. விழாவில் அரக்கோணம் முன்னாள் எம்.பி. திருத்தணி கோ.அரி கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தாா்.

சனிக்கிழமை நண்பகல் 11 மணிக்கு முருகப் பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் நா.பழனிகுமாா், தக்காா் வே.ஜெயசங்கா் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com