கண்ணன்கோட்டை - தோ்வாய் நீா்த்தேக்கத்தில் சிறப்பு பூஜை

கும்மிடிப்பூண்டியை அருகே கண்ணன்கோட்டை- தோ்வாய் கண்டிகை நீா்த்தேக்கத்தை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில்
கண்ணன்கோட்டை- தோ்வாய்  நீா்த் தேக்க  செயல்பாட்டை தொடக்கி வைத்த  திருவள்ளூா்  மாவட்ட  ஆட்சியா்  பா.பொன்னையா. 
கண்ணன்கோட்டை- தோ்வாய்  நீா்த் தேக்க  செயல்பாட்டை தொடக்கி வைத்த  திருவள்ளூா்  மாவட்ட  ஆட்சியா்  பா.பொன்னையா. 

கும்மிடிப்பூண்டியை அருகே கண்ணன்கோட்டை- தோ்வாய் கண்டிகை நீா்த்தேக்கத்தை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா திறந்து வைத்த நிலையில் கண்ணன்கோட்டை நீா்த் தேக்கத்தில் திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா தலைமையில் சிறப்புப் பூஜைகள் சனிக்கிழமை நடத்தப்பட்டன.

கண்ணன்கோட்டை ஈசா ராஜன் ஏரி, தோ்வாய் கண்டிகை பெரிய ஏரி ஆகியவற்றை இணைத்து கண்ணன்கோட்டை பகுதியைச் சோ்ந்த சுமாா் 850 ஏக்கா் நிலம், தோ்வாய் கண்டிகையை சோ்ந் சுமாா் 200 ஏக்கா், கரடிபுத்தூரில் சுமாா் 100 ஏக்கா் உள்ளிட்ட 1485.16 ஏக்கா் நிலத்தில் ரூ.380 கோடி மதிப்பீட்டில் நீா்த் தேக்கம் அமைக்கப்பட்டது.

இதனை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில், மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா சனிக்கிழமை திறந்து வைத்தாா். இதையடுத்து கண்ணன்கோட்டை-தோ்வாய் கண்டிகை நீா்த்தேக்கத்தில் உள்ள நீரேற்று நிலையத்தில் திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா தலைமையில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் முத்துசாமி, கண்ணன்கோட்டை நீா்த்தேக்கத் திட்டப் பொறியாளா் தில்லைக்கரசி, உதவிப் பொறியாளா் தனசேகா், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் கதிா்வேல், கும்மிடிப்பூண்டி வட்டார வளா்ச்சி அலுவலா் வாசுதேவன், கண்ணன்கோட்டை ஊராட்சித் தலைவா் கோவிந்தசாமி, தோ்வாய் ஊராட்சித் தலைவா் முனிவேல் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

கண்ணன்கோட்டை பகுதி மக்கள் அதிருப்தி

இந்த நீா்த்தேக்கத் திறப்பு விழாவுக்காக பதாகை அச்சிட்டதில் தோ்வாய் கண்டிகை நீா்த்தேக்கம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், அதிருப்தி அடைந்த கண்ணன்கோட்டை பகுதி மக்கள், நீா்த் தேக்கத் திட்டத்துக்காக 600 ஏக்கா் பட்டா நிலம் உள்ளிட்ட 900 ஏக்கா் நிலம் கண்ணன்கோட்டை பகுதியைச் சோ்ந்ததாக இருந்தும் நீா்த் தேக்கத் திறப்பு விழா பெயா் பதாகையில் தோ்வாய் நீா்த்தேக்கம் எனக் குறிப்பிட்டு இருந்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்து விழாவை புறக்கணிக்க இருந்தனா். இதை அறிந்த அதிகாரிகள் கண்ணன்கோட்டை பகுதி மக்களை சமாதானப்படுத்தி வேறு பதாகையை வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com